அஜீத்தின் கார் டிரைவர் கையில் 'ஐ போன்': பரிசளித்தது 'தல' தான்
சென்னை: அஜீத் தனது கார் டிரைவருக்கு ஐ போன் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளார்.
அஜீத் தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் தனது கார் டிரைவருக்கு விலை அதிகம் உள்ள ஐ போனை பரிசாக அளித்துள்ளார்.

அண்மையில் ஒரு நாள் அஜீத் காரில் சென்று கொண்டிருக்கையில் அவரது டிரைவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர் வைத்திருந்தது விலை மலிவான பழைய போன் என்பதால் அதை எடுத்து அஜீத் முன்பு பேச தயங்கியுள்ளார். பின்னர் வேறு வழியில்லாமல் போனில் பேசியுள்ளார்.
இதை பார்த்த அஜீத் காரை செல்போன் கடை அருகே நிறுத்துமாறு கூறியுள்ளார். செல்போன் கடைக்குள் சென்ற அஜீத் விலை உயர்ந்த ஐ போன் ஒன்றை வாங்கி தனது டிரைவருக்கு பரிசாக அளித்துள்ளார்.
புது போன் கிடைத்ததில் டிரைவருக்கு பெரு மகிழ்ச்சி. கார் ஓட்டும்போது செல்போனை எடுத்து காதில் வைக்காமல் ஹெட்செட் அணிந்து பேசுமாறு அஜீத் அவருக்கு அறிவரை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











