அடுத்த மாதம் அஜீத்துக்கு காலில் ஆபரேஷன்: 2 மாதம் ஓய்வு எடுக்கிறார்
சென்னை: நடிகர் அஜீத் குமார் படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அடுத்த மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படப்பிடிப்பில் சண்டை காட்சி ஒன்றில் டூப் போடாமல் நான் தான் நடிப்பேன் என்று நடித்தார் அஜீத்.
மும்பையில் படமாக்கப்பட்ட அந்த சண்டை காட்சியின்போது அஜீத் குமாருக்கு காலில் அடிபட்டது.

ஆர்யா ஓட்டிய கார்
படத்தில் ஆர்யா கார் ஓட்ட அஜீத் அதன் முன்னால் நின்று வருவார். அந்த காட்சியை படமாக்கும்போது தான் அஜீத்தின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை
அஜீத் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவரோ உடனே அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார்.

படங்கள் முடியட்டும்
ஆரம்பம், வீரம் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். இந்நேரம் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் அந்த படங்களை முடித்துவிட்டு செய்து கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார் அஜீத்.

அடுத்த மாதம்
ஆரம்பம் ரிலீஸாகிவிட்டது. வீரம் பொங்கலுக்கு தாயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் டிசம்பர் மாதத்துடன் படமாக்கப்பட்டுவிடும். இதையடுத்து அவர் டிசம்பரிலேயே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.

2 மாதங்கள் ஓய்வு
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அஜீத் 2 மாதங்கள் ஓய்வில் இருப்பார். அதன் பிறகு பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்கும் கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.


Click it and Unblock the Notifications











