twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஜா பாதிப்பு: உண்மையிலேயே சத்தமில்லாமல் உதவி செய்தது 'தல' தான்

    By Siva
    |

    Recommended Video

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்தமில்லாமல் உதவிய அஜீத்

    சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையிலேயே சத்தம் இல்லாமல் உதவி செய்தவர் அஜித் தான்.

    கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்கே சோறு போட்ட விவசாயிகள் ஒரு வேலை சோற்றுக்கு வழியில்லாமல் உதவியை எதிர்பார்த்து உள்ளனர்.

    இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள்.

    அரசு

    அரசு

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நிதி அளித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் நடிகர் அஜித் குமாரின் பெயரும் உள்ளது.

    கஜா

    கஜா

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக எத்தனையோ நடிகர், நடிகைகள் உதவி செய்கிறார்கள். ஆனால் இந்த அஜித் ஒரு உதவியும் செய்யாமல் குடும்பத்துடன் கோவா சென்றுவிட்டாரே என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் தான் அஜித் சத்தமில்லாமல் உதவி செய்தது தெரிய வந்துள்ளது.

    காசோலை

    காசோலை

    கஜா நிவாரண நிதிக்காக அஜித் ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. யாருக்கும் தெரியாமல் உதவி செய்வது அஜித்தின் குணம். தமிழக அரசு பட்டியல் வெளியிட்டதால் தான் அவர் உதவி செய்தது தெரிய வந்தது.

    லண்டன்

    லண்டன்

    கோவாவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய அஜித் உடனே லண்டன் கிளம்பிச் சென்றுள்ளார். அவர் சிவா இயக்கத்தில் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அடுத்ததாக அவர் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ஹெச். வினோத்தின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Ajith Kumar has given Rs.15 lakh for Gaja relief fund.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X