அஜித்துக்கு Strength ரொம்ப கம்மி.. கனல் கண்ணன் மாஸ்டர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் வெளியானது
நேர்கொண்ட பார்வை,வலிமை என இரண்டு படங்களில் ஒன்றாக ஹெச் வினோத் இயக்கத்தில் பணியாற்றிய அஜித் அதைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்
ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களின் சந்தோஷத்தை மட்டும் மனதில் வைத்து வித்தியாசமான கதைகளில் ரிஸ்க் எடுத்து நடித்து வரும் நடிகர் அஜித்துக்கு Stregnth ரொம்ப கம்மி என கனல் கண்ணன் மாஸ்டர் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

ஹெச் வினோத் உடன் கூட்டணி
நடிகர் அஜித் தன்னுடன் பணியாற்றும் இயக்குனர்களை தனக்கு பிடித்துவிட்டால் அவர்களும் தொடர்ந்து பணியாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் அப்படித்தான் சிறுத்தை சிவாவுடன் இணைந்து வீரம், விவேகம்,வேதாளம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது ஹெச் வினோத் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை
சதுரங்க வேட்டை மூலம் தமிழ் ரசிகர்களை பிரமிக்க வைத்த இயக்குனர் ஹெச் வினோத் அதைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்று பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தை இயக்கினார். கார்த்தி நடிப்பில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று என இயக்கிய இரண்டே படங்களில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹெச் வினோத் உடன் அஜித் முதன் முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

முழுக்க முழுக்க ஆக்சன்
தொடர்ந்து கமர்சியல் படங்களில் மட்டும் நடிக்காமல் ரிஸ்க் எடுத்து ஆக்சன் கதைகளில் நடித்து வரும் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் வலிமை..
இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்த வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக ரசிகர்களுக்கு விருந்து வைத்தது.

பைக் ரேசிங்
பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துகள் என அனைத்தும் அடங்கிய வலிமை திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கார் மற்றும் பைக் ரேசிங் மீது மிகவும் ஆர்வம் கொண்ட அஜித் தன்னுடைய உடல் நிலையையும் பொருட்படுத்தாது வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக நடித்து இருப்பார்.

அஜித்துக்கு Strength ரொம்ப கம்மி
இந்நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அதைத் தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் அஜித்துடன் அசல் படத்தில் பணியாற்றியபோது அவருக்கு முதுகு தண்டுவடத்தில் மிகப்பெரிய பிரச்சினை இருந்தது. அதனால் அவருக்கு Strength ரொம்ப கம்மியாக இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து இன்றுவரை படங்களில் நடித்து வருகிறார். முடியாது என்று சொல்வதை முடித்துக் காட்ட வேண்டும் என்ற பழக்கம் கொண்டவர் அஜித்.


Click it and Unblock the Notifications











