twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆளில்லா விமானத்தை உருவாக்க 'எம்.ஐ.டி.'க்கு உதவும் அஜித்

    By Siva
    |

    Recommended Video

    ஆளில்லா விமானத்தை பறக்க வைக்கும் தல அஜித்- வீடியோ

    சென்னை: சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நடிகர் அஜித் குமாரை நியமித்துள்ளனர்.

    விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார் அஜித் குமார். அவர் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் வல்லவர். அவர் ஆளில்லா விமானங்களை இயக்கும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

    இந்நிலையில் அஜித்துக்கு புதிய பொறுப்பு ஒன்று கிடைத்துள்ளது.

    ஆளில்லா விமானம்

    ஆளில்லா விமானம்

    மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    அஜித்

    அஜித்

    மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளும் குழுவுக்கு உதவி செய்ய அஜித் குமாரை எம்.ஐ.டி. நியமித்துள்ளது. அவர் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தானம்

    தானம்

    அஜித்தின் உதவியுடன் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று எம்.ஐ.டி.காரர்கள் நம்புகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் எம்.ஐ.டி.க்கு வந்து செல்லும்போது அவருக்கு ரூ. 1,000 வழங்கப்படும். அதை எம்.ஐ.டி.யில் உள்ள ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்துவிட்டார் அஜித்.

    ரத்த மாதிரி

    ரத்த மாதிரி

    யுஏவி சேலஞ்சில் ஆளில்லா விமானத்தை 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நோயாளியின் இடத்திற்கு செல்லவிட்டு அவரிடம் இருந்து ரத்த மாதிரியை சேகரித்துக் கொண்டு திரும்பி வர வேண்டும். மாதிரிகளை ஆய்வகத்திற்கு கொண்டு வருவது தான் சவால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகிழ்ச்சி

    எம்.ஐ.டி. அஜித் குமாருக்கு அளித்துள்ள கவுரவம் பற்றி அறிந்த தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகிறார்கள்.

    Read more about: ajith அஜித்
    English summary
    Madras Institute of Technology has appointed actor Ajith Kumar as its ‘Helicopter Test Pilot and UAV System Adviser’. He will help the team to develp a UAV that will be flown at a competition in Australia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X