twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓவியரின் மகனின் கல்விக்கு ரூ 2.65 லட்சம் உதவி செய்த 'அல்டிமேட்' அஜித்

    By Shankar
    |

    சென்னை: அஜீத் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அதற்கு ஓர் சிறு உதாரணம் இந்த சம்பவம்.

    தமிழ் பத்திரிகைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபாற்றும் ஓவியர் ஒருவர் தனது மகன்களை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.

    படிப்பு செலவைச் சமாளிக்க முடியாத நிலையில் பலரிடமும் கடன் வாங்கி மகனுக்கு பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார் ஓவியர்.

    அஜித்

    மகனுக்கு இது இறுதியாண்டு. ஆனால் இறுதி ஆண்டுக்கான பணத்தை தந்தையால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. கல்லூரியிலிருந்து மகனை வெளியேற்றும் நிலை உருவானதாம். வேறு வழியில்லாமல் தன்னிடம் அன்பு பாராட்டும் நடிகர் சிவகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகரம் பவுண்டேஷன்லேர்ந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டாராம் ஓவியர்.

    ஆனால் அகரம் பவுண்டேஷன் விதிமுறைகள் இடம் தராததால், சிவகுமாரே குறிப்பிட்ட தொகை கொடுத்து உதவியிருக்கிறார்.

    அது போதவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மூத்த பத்திரிகையாளர் மூலம் அஜீத் மேலாளருக்கு அனைத்து விவரங்களையும் அனுப்பி வைத்தார் ஓவியர்.

    பத்து நாட்கள் கடந்தன. அஜீத் தரப்பிலிருந்து ஓவியருக்கு எந்த பதிலும் இல்லை. பதட்டமாகிவிட்ட ஓவியர், பத்திரிகையாளரிடம் 'என்ன... உதவி கிடைக்குமா?' என விசாரிக்க ஆரம்பித்த போது, அஜீத்திடமிருந்து நல்ல சேதி வந்தது.

    ஓவியர் கேட்ட தொகை மொத்தத்தையும் அஜீத் ஒரு காசோலையில் நிரப்பி தன் மேலாளர் மூலம் கொடுத்தனுப்பி விட்டார். அவர் கொடுத் தொகை ரூ 2.65 லட்சம்.

    ஓவியர் மகனின் படிப்புச் செலவு முழுவதையுமே இந்தத் தொகையில் சமாளித்துவிடலாம் என்பதால் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாராம் ஓவியர்.

    English summary
    Ajith helped for boy who is studying in US. Fe is a son of an artist.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X