Ajith: சென்னை மழை, வெள்ளம்... அஜித் செய்த உதவி தெரியுமா..? லிஸ்ட் போய்கிட்டே இருக்குதே!
சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றுள்ளார். முன்னதாக சென்னை மழை வெள்ளத்தின் போது அஜித் உதவி செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அஜித் மறைமுகமாக உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் செய்த மறைமுக உதவி
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முன்னதாக மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளத்தின் போது அஜித் சென்னையில் இருந்தார்.

அப்போது வெள்ளத்தில் சிக்கித் தவித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோருக்கு அஜித் உதவி செய்திருந்தார். அதாவது அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரையும் மீட்க அஜித் உதவி செய்துள்ளார். இதனை விஷ்ணு விஷால் மிக நெகிழ்ச்சியோடு தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். இது ஒருபக்கம் பாராட்டைப் பெற்றாலும், இன்னொரு பக்கம் அஜித் மீது விமர்சனங்களும் எழுந்தன.
அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித், மக்களை மறந்துவிட்டாரா என்பதாக நடிகர் போஸ் வெங்கட்டும் விமர்சனம் செய்திருந்தார். இதற்கும் அஜித் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அஜித் மறைமுகமாக ஏராளமான உதவிகள் செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் அதிகமானவர்களை அஜித் தனது வீட்டில் தங்க வைத்திருந்ததாகவும், அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், அவரது வீடு அருகே பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மழை, வெள்ள நிவாரணமாக 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதாகவும், இது மறைமுகமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர திரைத்துறையைச் சேர்ந்த நலிவடைந்த டெக்னீஷியன்களுக்கும் அஜித் உதவியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எதுவும் வெளியே தெரியாமல் அஜித் செய்த உதவி என்றும், இது தெரியாமல் அவரை விமர்சிப்பதாகவும் அவரது ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











