கௌதமுக்காக ஸ்லிம் ஆக ஜிம்மில் கிடையாய் கிடக்கும் அஜீத்
சென்னை: அஜீத் கௌதம் மேனனின் படத்தில் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமாம். அதற்காக அவர் ஜிம்முக்கு சென்று கொண்டிருக்கிறார்.
அஜீத் குமார் வீரம் படத்தை முடித்த பிறகு ஆரம்பம் படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.
படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குகிறதாம்.

ஸ்லிம்
கௌதம் மேனன் படத்தில் அஜீத் குமார் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமாம். அதனால் அவர் ஜிம்மே கதி என்று கிடக்கிறாராம். முன்னதாக ஆரம்பம் படத்திற்காக அவர் ஜிம்முக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பு
அஜீத் உடல் எடையை குறைத்து விட்டு வர கௌதம் மேனன் படக்குழு காத்திருக்கிறதாம். இந்த படப்பிடிப்பு முடியும் வரை அவர் யார் கண்ணிலும் படாமல் இருக்கப் போகிறாராம்.

உடல் நிலை
அஜீத்துக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லை என்றால் பிரச்சனை பெரிதாகிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அவர் ஜிம்முக்கு செல்கிறார்.

கெட்டப்
கௌதம் படத்தில் அஜீத்தின் லுக், உடை, ஹேர்ஸ்டைல் என்று அனைத்துமே வித்தியாசமாக இருக்குமாம். இந்த படத்தில் அஜீத்தின் தலைமுடியின் நிறம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அனுஷ்கா
கௌதம் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். வில்லனாக கார்த்திக் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகையர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











