மயானத்திலும் கைகளை விடாத அஜித் - ஷாலினி.. அம்மா போன பிறகு இனி ஏகேவுக்கு துணையே மனைவிதான்

சென்னை: அஜித்குமாரும், ஷாலினியும் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தபோது காதலித்தார்கள். அவர்கள் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். மணமுடித்த பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார் ஷாலினி. குடும்பத்தை கவனித்துக்கொண்டு பொறுப்புள்ள தாயாக விளங்கிவருகிறார். சூழல் இப்படி இருக்க நேற்று முன்தினம் அஜித்தின் தாய் மோகினி தனது 89வது வயதில் உயிரிழ்ந்தார்.

அமர்க்களம் படத்தில்தான் அஜித்தும், ஷாலினியும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது. இவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். குடும்பத்துடன் இந்தத் தம்பதி நிம்மதியாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துவருகிறது.

Ajith Holds Shalini s Hand Tightly After Mother s Funeral Emotional Video Goes Viral

எங்கேயும் ஷாலினி: அஜித் இப்போது நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கவனத்தை செலுத்திவருகிறார். அதற்கு ஷாலினி தன்னால் முடிந்த அத்தனை சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார். பெரும்பாலும் அஜித் ரேஸுக்கு செல்வதற்கு முன்பு அருகே ஷாலினியும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். தன் மனைவிக்கு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்த பிறகுதான் ஏகே வண்டி ரேஸில் சீறிப்பாயும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்த்து பலரும், ஜோடினா இப்படித்தான் இருக்கணும் என பூரிப்பார்கள்.

Also Read
மஞ்சணத்தி.. இளையராஜா - மாரி செல்வராஜ் இணையும் படம்.. அறிவிப்பு வீடியோவே மெய் மறக்க செய்யுது
மஞ்சணத்தி.. இளையராஜா - மாரி செல்வராஜ் இணையும் படம்.. அறிவிப்பு வீடியோவே மெய் மறக்க செய்யுது

ட்ரெண்டாகும் வீடியோக்கள்: அதேபோல் அவர்கள் தொடர்பான பல வீடியோக்கள் ட்ரெண்டாகும். தனது காலில் ஷாலினி விழுந்த பிறகும், 'வீட்டுக்கு போனதும் நான் விழணும்' என அஜித் சொன்னது, வெளிநாட்டு வீதிகளில் இரண்டு பேரும் ஹாயாக நடந்து சென்றது, சமீபத்தில்கூட ஷாலினியை தூக்கி போஸ் கொடுத்தது என அவர்கள் தொடர்பான க்யூட் மொமண்ட்டுகளும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், இயல்பாகவும் இருக்கும். திருமணத்துக்கு பிறக ஒரு ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர்கள்தான் உதாரணம் என்பது ரசிகர்களின் கருத்து.

அஜித் அம்மா மரணம்: நிலைமை இப்படி இருக்க அஜித்தின் தாயான மோகினி மணி நேற்று முன்தினம் 89வது வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். ஏற்கனவே ஏகேவின் தந்தை சுப்ரமணியம் சில வருடங்களுக்கு முன்புதான் தவறியிருந்தார். இப்போது தாயும் உயிரிழந்திருப்பதால் அஜித் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கிறார். மோகினியின் உடலுக்கு முதலமைச்சர் விஜய், நடிகை திரிஷா மற்றும் பல இயக்குநர்கள், நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், ஆறுதல் தெரிவித்துவிட்டும் வந்தார்கள்.

கைகள் விடாத அஜித்: இந்நிலையில் அஜித்தின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தன் தாயை மின் மயானத்தில் தகனம் செய்துவிட்டு வந்தபோது; தன் அருகே வந்த மனைவி ஷாலினியின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நடந்து வந்தார் ஏகே. தன் தாய் போன பிறகு இனிமேல் தனக்கு இன்னொரு தாய் ஷாலினிதான் என்பதை சொல்லாமல் சொல்லியது போல் இருந்தது அவரது நடவடிக்கை. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஏகேவின் ஒட்டுமொத்த சோகத்துக்கும் இப்போது ஒரே வடிகால் மனைவி ஷாலினி மட்டும்தான் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X