அட அஜித் இல்லையாம்.. அந்த நடிகர்தான் தீனாவில் நடிக்க இருந்ததாம்?.. நல்லாத்தான் இருந்திருக்கும்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் தீனா படத்தில் முதலில் நடிக்க வேண்டியிருந்த ஹீரோ குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

Ajith in Not First Choice to Act in Dheena Movie Here are the details

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். இந்த முறை உலகத்தை சுற்றாமல் இந்தியாவை சுற்றிவருகிறார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

அப்டேட் எப்போ பாஸ்: அந்தப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபக்கம் விடாமுயற்சியின் நிலை என்னதான் ஆச்சு என்று விரக்தியுடன் கேள்வி கேட்டுவருகின்றனர். ஏனெனில் லைகாவுக்கு பண பிரச்னை வந்துவிட்டது அதனால் ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது, திரிஷா படத்திலிருந்து விலகிவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கலக்கமடைய செய்தன. எனவே ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி எழுந்தது.

மீண்டும் ஷூட்டிங்?: சூழல் இப்படி இருக்க லைகாவுக்கு நேர்ந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன எனவே ஏப்ரல் 10ஆம் தேதி மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என கூறப்பட்டது. மேலும் ஒரேகட்டமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை முடிக்கும்படி அஜித் கேட்டுக்கொண்டதாகவும்; அதற்கேற்றபடி மகிழ் திருமேனி ஷெட்யூலை பிளான் செய்திருக்கிறார் என்றும் கோடம்பாக்கத்தில் குரல்கள் கேட்டன. ஆனால் விடாமுயற்சி நிலைமை என்னவென்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.

குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அஜித். படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ஷூட்டிங்கை மே மாதம் 10ஆம் தேதியிலிருந்து தொடங்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்கு அஜித்தும் ஓகே சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு தகவல் ஓடியதும் நினைவுகூரத்தக்கது.

தீனா: இதற்கிடையே அஜித்துக்கு பக்கா ஆக்‌ஷன் படமாக அமைந்தவைகளில் ஒன்றுதான் தீனா. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். 2001ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்திலிருந்துதான் அவருக்கு தல என்ற அடைமொழியும் வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியதிருந்தது அஜித் இல்லையாம். பிரசாந்த்திடம்தான் முதலில் இந்தக் கதையை கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். பிரசாந்த்துக்கும் கதை பிடித்திருந்ததாம். ஆனால் அப்போது தேதி பிரச்னையால் அந்தப் படத்தில் பிரசாந்த்தால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X