»   »  'தளபதி' வீட்டில் 'தல'!

'தளபதி' வீட்டில் 'தல'!

Subscribe to Oneindia Tamil
Click here for more images

விஜய் தனது வீட்டில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார். கோலிவுட்டில் ஹாட் நியூஸே இதுதான்.

தீபாவளியன்று வெளியாகும் அழகிய தமிழ் மகன் படத்தைத் தொடர்ந்து அஜீத்துக்கு விருந்து கொடுக்க தீர்மானித்தார் விஜய். இதையடுத்து அஜீத்தை விருந்துக்கு அழைத்தார்.

அஜீத்தும் இந்த அழைப்பை தட்டாமல் ஏற்றுக் கொண்டாராம். இதைத் தொடர்ந்து விஜய் வீட்டுக்கு அஜீத் செல்ல அங்கு அவரை விஜய் குடும்பத்தினர் வரவேற்று விருந்து கொடுத்து கவுரவித்துள்ளனர்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், மனைவி சங்கீதா ஆகியோரும் விருந்தின்போது உடனிருந்தனராம்.

இருவரும் கடும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வரும் நடிகர்கள். இருவரும் இரு துருவங்களாகவும் இருந்து வந்தனர். இருவரது படங்களிலும் சரமாரியாக மாறி மாறி காமெண்ட் அடிக்கும் வசனங்களும் தவறாமல் இடம் பெற்று வந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே சில சமரச முயற்சிகள் நடந்தன. இதில் இருவரும் கூல் ஆனதாக கூறப்பட்டது. இதையடுத்து விஜய் படங்களில் இப்போது அஜீத்தை சீண்டும் வசனங்கள் இடம் பெறுவதில்லை.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அஜீத்தை வரவழைத்து விஜய் விருந்து கொடுத்திருப்பதன் மூலம் இருவருக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளும் போயே போய் விட்டதாக திரையுலகினர் பேசிக் கொள்கின்றனர்.

இருவரும் இணைந்து ரொம்ப காலத்திற்கு முன்பு ராஜாவின் பார்வையிலே என்ற ஒரு படத்தில் நடித்துள்ளனர் என்பது நிறையப் பேருக்கு மறந்து போயிருக்கும். அந்த படப்பிடிப்பின்போது தனது வீட்டிலிருந்துதான் விஜய் சாப்பாடு கொண்டு வந்து அஜீத்துக்குக் கொடுப்பாராம்.

இந்த நட்பு இருவரின் ரசிகர்களுக்கும் இடையில் உருவானால் இன்னும் ரொம்ப நல்லது.

Read more about: ajith

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil