ஒரு சீன் இருக்க கூடாது.. மாத்துங்க.. கண்டிப்பாக சொன்ன அஜித்.. தல 60 படத்தில் நடந்த டிவிஸ்ட்!

தான் நடிக்கும் 60வது படத்தின் கதையில் முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நடிகர் அஜித் இயக்குனர் எச். வினோத்திடம் கூறி இருக்கிறார்.

Recommended Video

ரகசியமாக தொடங்கிய அஜித்தின் 60 படப்பிடிப்பு-வீடியோ

சென்னை: தான் நடிக்கும் 60வது படத்தின் கதையில் முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நடிகர் அஜித் இயக்குனர் எச். வினோத்திடம் கூறி இருக்கிறார்.

நடிகர் அஜித் நடிக்கும் 60வது படம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் இணைந்து கடந்த மாதம் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட்டார்கள்.

பிங்க் படத்தின் ரிமோக்கான இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்தது. மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இதே படக்குழு இணைந்துள்ளது.

யார் நடிக்கிறார்

யார் நடிக்கிறார்

இந்த படத்தில் அஜித் உடன் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். தமிழில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கும் முதல் படமாகும் இது. ஜான்வி கபூருக்கு இந்தியில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க தீரன் படம் போல ஆக்சன் பாணியில் இருக்க போகிறதாம். அதேபோல் துப்பறியும் பாணியில் இந்த படம் இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த படத்தின் சில புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிறைய காட்சிகள்

நிறைய காட்சிகள்

இந்த படத்தில் நிறைய சேஸிங் மற்றும் ரேஸிங் காட்சிகள் இருக்கிறதாம். மிகவும் கடினமான ஸ்டண்ட் காட்சிகள், பைக் ரேஸ் காட்சிகள் இதில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக சரியான லொகேஷன்களை தற்போது படக்குழு தேடி வருகிறது.

கதை மாற்றம்

கதை மாற்றம்

இந்த நிலையில் கதையில் பெண்களுக்கு எதிராக எந்த விதமான வசனமும் இருக்க கூடாது. ஒரு காட்சி கூட பெண்களுக்கு எதிராக இருக்க கூடாது என்று அஜித் கண்டிப்பாக கூறிவிட்டார். அதேபோல் ஏதாவது காட்சிகள் இருந்தாலும் அதை கதையில் இருந்து நீக்கும்படி கூறிவிட்டார் என்கிறார்கள்.

அஜித் எப்படி

அஜித் எப்படி

நடிகர் அஜித் கடைசியாக நடித்த நேர்கொண்ட பார்வை படம் பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட முற்போக்கு படம். நடிகர் அஜித்தும் இதேபோல் இனி வரும் படங்களிலும் முற்போக்கு கருத்துக்களை மட்டும் சொல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Read more about: h vinoth ajith அஜித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X