ரேஸிங்குக்கு பை பை.. இப்போ பாக்ஸிங்தான் அஜீத்தோட ஆசை!
தமிழகத்தைப் பொறுத்தவரை ரேஸிங் எனும் கார் பந்தயத்தில் எத்தனை வீரர்கள் சாதித்திருந்தாலும், அந்த விளையாட்டுக்கு சம்பளம் வாங்காத விளம்பர தூதராக இருந்தவர் நடிகர் அஜீத் குமார்தான்.
அவர் சினிமாவில் பிஸியாக இருந்த போதே, ரேஸிங்குக்குப் போகிறேன் என்று அறிவிக்க, 'அடேங்கப்பா, அவ்ளோ பெரிய விளையாட்டாய்யா அது' என பாமரர்களும் கேட்க ஆரம்பித்தனர்.
பின்னர் ரேஸிலிருந்து விலகினாலும், அவ்வப்போது தன் டுகாட்டி பைக்கில் நெடுந்தூரம் பயணிப்பதும், சாலை விதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

ரேஸ் வேணாம்
இப்போது ரேஸுக்கு ஒரேயடியாக பை சொல்லிவிட்டாராம் அஜீத். முதுகு வலி, காலில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் போன்றவைதான் அவரை இந்த முடிவெடுக்க வைத்தனவாம்.

இப்போ பாக்சிங்
அதே நேரம் பாக்ஸிங் பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறாராம். ஏதாவது ஒரு பயிற்சி நிச்சயம் வேண்டும். ரேஸை விட, பாக்ஸிங் இப்போதைக்கு சேஃப் என்று கூறி, அதற்கான பயிற்சியில் தீவிரமாக உள்ளாராம் அஜீத்.

விரைவில் அறுவை சிகிச்சை
முதுகுவலி மற்றும் கால் வலிக்கான சிகிச்சையையும் கவுதம் மேனன் படம் முடிந்ததுமே மேற்கொள்ளப் போகிறாராம்.

மனைவியுடன்
இனி குடும்பம், குழந்தைகள்மீது மட்டுமே முழுக் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ள அஜீத், ஷாலினியின் இரண்டாவது பிரசவத்தின்போதும் உடனிருக்கப் போகிறாம். முதல் குழந்தை பிறந்த போதும், தன் மனைவியுடன் இருந்தார் அஜீத். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார்.


Click it and Unblock the Notifications











