»   »  அஜீத் ஒரு பக்கா ஜென்டில்மேன்: ஜெயபிரகாஷ்

அஜீத் ஒரு பக்கா ஜென்டில்மேன்: ஜெயபிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் குமார் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று நடிகர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

செல்லமே, தவசி போன்ற படங்களை தயாரித்தவர் ஜெயபிரகாஷ். அதன் பிறகு சேரனின் மாயக்கண்ணாடி மூலம் நடிகரானார். தற்போது அவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் மாயக்கண்ணாடி, வெள்ளித்திரை படங்களில் நடித்தாலும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ பசங்க தான்.

பசங்க சொக்கன்

பசங்க சொக்கன்

பசங்க படத்தில் வாத்தியார் சொக்கலிங்கமாக வந்த ஜெயபிரகாஷ் நடிப்பில் முத்திரை பதித்தார். இந்த படம் மூலம் அவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது.

த்ரிஷா அப்பா

த்ரிஷா அப்பா

பசங்க படத்திற்கு பிறகு அவர் பல்வேறு படங்களில் நடித்தாலும் அஜீத் குமாரின் மங்காத்தா படத்தில் த்ரிஷா அப்பாவாக ஆறுமுக செட்டியார் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். இந்த படமும் அவர் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இதை அவரே தெரிவித்துள்ளார்.

அஜீத் பக்கா ஜென்டில்மேன்

அஜீத் பக்கா ஜென்டில்மேன்

அஜீத் குமார் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Jayaprakash who acted as Trisha's father in Mankatha described Ajith Kumar as a perfect gentleman.
Please Wait while comments are loading...