'யட்சன்' ஆர்யாவுக்கு அஜீத் தான் சூப்பர் ஸ்டாராம்
சென்னை: யட்சன் படத்தில் ஆர்யாவுக்கு அஜீத் தான் சூப்பர் ஸ்டாராம்.
விஷ்ணுவர்தன் தயாரித்து, இயக்கி வரும் படம் யட்சன். இதில் ஆர்யா, விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் படத்தில் அஜீத் கெஸ்ட் ரோலில் வருகிறார் என்று கூறப்பட்டது.

அஜீத்
யட்சன் படத்தில் அஜீத் ஒரு காட்சியில் மட்டும் வருகிறார் என்ற செய்தியில் உண்மை இல்லையாம். ஆனாலும் படத்தில் அஜீத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆர்யா
யட்சன் ஹீரோ ஆர்யா ஒரு சூப்பர் ஸ்டாரை பார்த்து பார்த்து வியப்பாராம். அந்த சூப்பர் ஸ்டார் வேறு யாரும் இல்லை 'தல' அஜீத் தான்.

வழிபாடு
படத்தில் ஆர்யா அஜீத் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பால் அவரை வழிபடும் அளவுக்கு சென்றுவிடுவாராம்.

ஆரம்பம்
விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படத்தில் அஜீத்தும், ஆர்யாவும் சேர்ந்து நடித்தார்கள். அதில் இருந்து அவர்கள் நிஜ வாழ்வில் நண்பர்களாக உள்ளனர்.

இங்கிலிஷ் விங்கிலிஷ்
ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் தான் அஜீத் கடைசியாக கெஸ்ட் ரோலில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











