அட அந்த நடிகைக்கு அஜித் ஒயிட் சாக்லேட் பாயாம்.. அவரே சொன்ன காரணத்தை பாருங்க

சென்னை: அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் ஏகே ரசிகர்களிடம் மெகா ஹிட்டானாலும் பொதுவான ரசிகர்களை கவரவில்லை. படம் முழுக்க பழைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸை வைத்து ஒப்பேத்திவிட்டார்கள் என்கிற விமர்சனத்தை பலரும் முன்வைத்தார்கள். ஆனால் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் பற்றி நடிகை தேவி பிரியா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

இந்திய சினிமாவில் டாப் 15 இடங்களுக்குள் இருப்பவர் அஜித்குமார். அவரது நடிப்பில் இந்த வருடம் மட்டும் இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. முதலில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது. ஆனால் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக படத்தில் அஜித்துக்கான மாஸ் சீன்களே இல்லையே என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே நொந்துகொண்டார்கள்.

குட் பேட் அக்லி: அந்தப் படம் ரிலீஸான சில மாதங்களிலேயே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் பிரபு, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். விடாமுயற்சியில் இருந்த குறைகள் எல்லாம் இந்தப் படத்தில் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும் என்ற ஆர்வத்தோடு ஏகே ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள்.

ஏகே ரசிகர்களுக்கு திருப்தி: அந்த ஆர்வத்தோடு சென்ற அவர்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்தது. அஜித்தை இப்படிப்பட்ட மாஸாக பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. தான் அஜித்தின் வெறித்தனமான ரசிகன் என்பதை படத்தின் ஒவ்வொரு சீனிலும் ஆதிக் நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். அதேபோல் ஆதிக்கின் மேக்கிங்கும் தரமாக இருந்தது; ஏகப்பட்ட மாஸ் சீன்கள் இடம்பெற்றிருக்கின்றன என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை.

Ajith is White Chocalate Boy Says Actress Devi Priya

அஜித்தின் கார் ரேஸ்: இதற்கிடையே கார் ரேஸிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறார் அஜித். தொடர்ந்து தனது அணியுடன் ரேஸில் பங்கேற்கும் அவர் பரிசுகளையும் வென்றுவருகிறார். கார் பந்தயம் நடக்கும் சமயங்களில் திரைப்படங்களில் கமிட்டாகமாட்டேன் என்றும் சொல்லிவிட்டார். இந்நிலையில் அஜித் மற்றும் சிம்ரன் ஆகியோர் குறித்து நடிகர் தேவி பிரியா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன.

தேவி பிரியா பேச்சு: அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், "அஜித் எப்போதுமே எனக்கு ஒயிட் சாக்லேட் பாய். அஜித்தை நான் அப்போதிருந்தே அப்படித்தான் கூப்பிடுவேன். அவர் ஷாட்டுக்கு வௌர்ம்போது தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்துக்கொண்டுதான் வருவார். ஆனால் அதற்கு பனியில் பூத்த பூ மாதிரி இருப்பார். அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன். அதேபோல் ரொம்பவே தன்மையாக நடந்துகொள்பவர். அவருடன் நடித்ததில் சந்தோஷம்.

சிம்ரன் பற்றி: சிம்ரனை பொறுத்தவரை அவர் ரொம்ப ஸ்வீட்டானவர். க்யூட்டானவர். சிம்ரனுடன் சேர்ந்து இரண்டு படங்களில்தான் நடித்தேன். இப்போதும் என்னை பார்த்தால் ஹாய் சொல்லி அணைத்துக்கொள்வார்" என்றார். தேவி பிரியா அஜித்துடன் வாலி படத்தில் நடித்தார். அதேபோல் இன்னும் சில படங்களில் நடித்திருக்கும் அவர் தமிழ் சின்ன்னத்திரை உலகில் படு ஃபேமஸாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X