அஜித் குமார், ஆதிக் சம்பளம் ஜெட் வேகத்தில் ஏறிடுச்சா?.. குட் பேட் அக்லி மொத்த வசூலே இவ்ளோதானே!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி விட்டதே விஜய் தான் என்கிற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்த நிலையில், அவர் அரசியல் பக்கம் யூடர்ன் போட்டு திரும்பி விட்டார். விஜய்யை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் தான் 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை வாங்குகின்றனர்.

குட் பேட் அக்லி படத்துக்கே அஜித் சம்பளம் அதிகமாக இருந்த நிலையில், அந்த அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரிய வசூலை அள்ளவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு சில கோடிகள் நஷ்டம் தான் என்றும் தகவல்கள் வெளியாகின.

Ajith Kumar and Adhik Ravichandran salary increased for their next big movie
Photo Credit:

ஆனாலும், நடிகர் அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்துக்கும் தனது சம்பளத்தை மேலும், உயர்த்திவிட்டதாகவும், ஆதிக்கின் சம்பளமும் ஜெட் வேகத்தில் அதிகரித்து இருப்பதாக பேச்சுக்கள் கோடம்பாக்கத்தையே கதிகலங்க வைத்துள்ளன.

கன்ஃபார்ம் பண்ண ஆதிக் ரவிச்சந்திரன்: நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்த ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை பிடித்துப் போய் அவர் இயக்கத்தில் நடிக்க அஜித் குமார் சம்மதம் தெரிவித்திருந்தார். அதே போல குட் பேட் அக்லி படத்தை இயக்கி அஜித் ரசிகர்களுக்கு மெகா விருந்தையே ஆதிக் ரவிச்சந்திரன் படைத்திருந்தார். 200 கோடிக்கும் அதிகமான வசூலை அந்த படம் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் அள்ளியது. இந்நிலையில், அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், நான் தான் மீண்டும் அஜித் சார் படம் பண்றேன் என்பதை ஆதிக் ரவிச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். ஜி.வி. பிரகாஷிடம் மைக்கை நீட்டி கேட்க, ஆதிக்கிடமே கேளுங்கப்பா என எஸ்கேப் ஆகிவிட்டார்.

அஜித் குமார் சம்பளம் உயர்வு: விடாமுயற்சி படத்துக்கு 105 கோடி ரூபாய் சம்பளத்தை அஜித் குமாருக்கு லைகா அளித்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ள நடிகர் அஜித் குமாரின் சம்பளம் தற்போது 180 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. வேதாளம் படத்தில் வரும் லுக்கிற்கு தற்போது மாறி வரும் நிலையில், ஆதிக் படத்தில் இந்த தோற்றத்தில் அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம்: மேலும், நடிகர் அஜித் குமார் சம்பளத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளமும் 10 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்துக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக அவரே பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார். அஜித்தை வைத்து ஆதிக் இயக்கும் அடுத்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தினால், ஆதிக்கின் சம்பளம் 20 முதல் 30 கோடியாகவும் உயர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

குட் பேட் அக்லி வசூல்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், பிரபு, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் 240 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டு அளவில் பார்த்தால் வசூல் ரொம்பவே குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அஜித் மற்றும் ஆதிக் சம்பளத்தை சேர்த்தாலே 190 கோடி ரூபாய் வருகிறதே என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X