அட்டகாசம் vs அஞ்சான் ரீ ரிலீஸ்.. அஜித் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் ஆன்லைனில் அடிச்சிக்கிறாங்களே?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்கள் வரவில்லை என்றால், எப்படியாவது அந்த நடிகர்களின் ரசிகர்களை தியேட்டருக்குள் வரவழைக்க தியேட்டர் ஓனர்கள் இந்த ரீ ரிலீஸ் டிரெண்டை ஆரம்பித்து கல்லா கட்ட முடியவில்லை என்றாலும் பராவயில்லை, அட்லீஸ்ட் கரன்ட் பில் செலவுக்காவது தேறுமா என பார்த்து வருகின்றனர்.

தயாரிப்பாளர்களும் புதிதாக எல்லாம் டாப் நடிகர்களை வைத்து படமெடுக்க டப்பு லேது என நினைத்து, அவர்கள் தயாரிப்பில் முன்னணி ஹீரோக்கள் நடித்து வெற்றிப் பெற்ற படங்களையும் ரசிகர்களை கவர்ந்த படங்களையும் ரீ ரிலீஸ் செய்து காசு பார்த்து வருகின்றனர்.

Ajith Kumar and Suriya fans started online fight over Attagasam and Anjaan re release

கடந்த வாரம் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் ரீ ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம் அஜித் குமாரின் அட்டகாசம் மற்றும் சூர்யாவின் அஞ்சான் உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் எந்த படத்துக்கு அதிக ஷோக்கள் என்றும் எந்த படத்துக்கு அதிக டிக்கெட் புக்கிங் என்கிற ஆன்லைன் சண்டை ஆரம்பித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், தனுஷ் படத்தை கண்டுக்கல: நாளை தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ரிவால்வர் ரீட்டா திரைப்படம் தில்லாக வியாழக்கிழமையே வெளியாகிறது. மேலும், தனுஷ் நடித்த இந்தி படமான தேரே இஷ்க் மே திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 28ம் தேதி வெளியாகிறது. ஆனால், இந்த 2 படங்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. கீர்த்தி சுரேஷ் பரபரப்பாக கோலிவுட்டில் புரொமோஷன் செய்து வருகிறார். தனுஷ் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் படம் ஓடினாலே போதும் என அங்கேயே முகாமிட்டுள்ளார்.

அட்டகாசம் vs அஞ்சான்: ரசிகர்கள் ஆன்லைன் சண்டை போட்டு வைப் செய்யும் அளவுக்கு அஞ்சான் ரீ ரிலீஸ் மற்றும் அட்டகாசம் ரீ ரிலீஸ் நாளை கச்சேரி கட்டப் போகிறது. இந்நிலையில், அஞ்சான் படத்துக்கு ரோகினி தியேட்டரில் ஒரு ஷோ தான் என்றும் அட்டகாசம் படத்துக்குத்தான் 4 ஷோ என அஜித் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆன்லைன் சண்டை: பதிலுக்கு சூர்யா ரசிகர்கள் அஞ்சான் படத்தின் ரீ ரிலீஸ் டிரைலருக்குத்தான் அதிக வியூஸ் என்றும் அட்டகாசம் படத்தை யாருமே சீண்டவில்லை என்றும் ரோஸ்ட் செய்து வருகின்றனர். பொங்கலுக்கு விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் நடக்கவுள்ள ஆன்லைன் சண்டையை இப்பவே அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் ஆரம்பித்து வைத்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X