அதிகாலை 3 மணிக்கு அஞ்சலி செலுத்த அப்பாயின்ட்மென்ட் கேட்டாரா அஜித்?.. கடுப்பான விஜயகாந்த் குடும்பம்!

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் நிபந்தனையுடன் அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளது விஜயகாந்த் குடும்பத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

உடல்நலக் குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின் முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Ajith Kumar asked for an appointment at 3 am to pay tribute to Vijayakanth

வெளிநாடுகளில் இருக்கும் மற்ற நடிகர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக விஜயகாந்தின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு வருகின்றனர். ஆனால், அஜித் இதுவரை வரவில்லை. ஒரு இரங்கல் செய்தியும் வெளியிடவில்லை. இதை பற்றி சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அஜித்தை காப்பாற்றியவர் விஜயகாந்த்: அதில், விஜயகாந்திற்கும் வடிவேலுவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு அது காவல்நிலையம் வரை சென்று விட்டது. இருந்தாலும், விஜயகாந்த் இறப்பிற்கு ஒரு இரங்கல் செய்தியாவது வெளியிட்டு இருக்க வேண்டும் ஆனால், அதைக்கூட அவர் செய்யவில்லை. இருந்தாலும் வருவதும் வராததும் வடிவேலுவின் உரிமை நாம் அதை எதுவும் சொல்ல முடியாது. ஆனால், அஜித் ஏன் வரவில்லை என்று கேட்பதற்கு உரிமை இருக்கு, ஏன் என்றால், விஜயகாந்திற்கும் வடிவேலுவுக்கும் இருக்கும் சண்டை போல, அஜித்திற்கும் விஜயகாந்திற்கும் எந்த சண்டையும் இல்லை. அது மட்டுமில்லாமல் அஜித்தை விஜயகாந்த் பலமுறை காப்பாற்றி இருக்கிறார். ஏன் என்றால், அந்த காலத்தில் அஜித் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும், இன்று வேண்டுமானால், அஜித் புனிதராக மாறி இருக்கலாம். ஆனால், அஜித் வளர்வதற்கு விஜயகாந்த் ஒரு காரணம் என்பதால் அவர் நிச்சயம் வந்து இருக்க வேண்டும்.

அதிகாலை 3 மணிக்கு: அஜித் தரப்பில் இருந்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளார். அப்பாயின்ட்மென்ட் கேட்டதோடு மட்டுமில்லாமல் அதிகாலை 3 மணிக்கு வர விரும்புவதாகவும் அப்போது தான் கூட்டம் இருக்காது என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், விஜயகாந்த் குடும்பத்தினர் வருத்தத்தில் இருப்பதால், அஜித்திற்கு எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை, இதனால் தான் அஜித் இதுவரை அஞ்சலி செலுத்த வரவில்லை என்று வலைப்பேச்சு அந்தணன் இந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், சாவுக்கு வர்றதுக்கு அப்பாயின்ட்மென்ட் கேட்ட ஒரே ஆளு இவருதான் என்று கருத்துக்களை பகிர்ந்து அஜித்தை வசைபாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X