மேட்ச் மொக்கையா போகுது... எனக்கு ஒரு காபி சொல்லு ஷாலினி.. தல வலியுடன் மேட்ச் பார்த்த அஜித் - வீடியோ

சென்னை: நேற்றைய இரவு சென்னை மெரினாவை விட அதிக ஆரவாரத்துடன் இருந்த இடம் என்றால் அது, சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானம் தான். ஐபிஎல் வந்துவிட்டாலே சென்னையே அதிரும் அளவுக்கு ஆரவாரம் செய்யும் ரசிகர்களுக்கு நேற்றைய இரவு, டபுள் ட்ரீட் விஷயம் தான். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியைப் பார்க்க நடிகர் தல அஜித் வந்திருந்தார். போட்டிக்கு நடுவே அஜித் காஃபி கேட்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான போட்டி நேற்று அதாவது, ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், அதன் பின்னர் சிறப்பாக விளையாடி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ajith Kumar Asks Coffee between CSK s Worst Performance Against SRH IPL 2025 Video

ரெட்டத்தல: வழக்கமாகவே சென்னை அணி, சேப்பாக்கத்தில் விளையாடும் போது அந்த போட்டியை பார்க்க பிரபலங்கள் தொடங்கி நட்சத்திரங்கள் வரை பலரும் வருவார்கள். இந்நிலையில் நேற்றையை போட்டியை பார்க்க நடிகர் அஜித் குமார், அவரது மனைவி நடிகை ஷாலினி, அவர்களின் மகன் மற்றும் மகள் என மொத்த குடும்பமாக வந்திருந்தார்கள். அஜித் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அஜித்தை மைதானத்தில் பார்த்ததும், ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இணையத்தில் இப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது தல அஜித் சி.எஸ்.கே போட்டியை பார்க்க வந்ததுதான்.

தல’வலி: அஜித் இந்த போட்டியை தனது மனைவி ஷாலினியின் விருப்பத்திற்காக வந்திருக்க கூடும் எனக் கூறுகிறார்கள். அதாவது நேற்று முன் தினம் இவர்களின் 25வது திருமண நாள் என்பதால், ஷாலினி மேட்ச் பார்க்க அழைத்திருக்க கூடும் எனக் கூறுகிறார்கள். போட்டி மிகவும் சுமாராக போய்க் கொண்டிருந்தது. சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தார்கள். இதற்கிடையில் சோர்வாக காணப்பட்ட அஜித் குமாரிடம் மனைவி ஷாலினி காபி வேண்டுமா எனக் கேட்கிறார். அஜித்தும் உடனே ஆமாம் என்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன்: இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள். கார் ரேஸ்ல 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் தல அஜித்தை கூட்டிக் கொண்டு வந்து இப்படி மொக்க மேட்சுக்கு கைதட்ட விட்டுட்டீங்களே!, அப்புறம் அவருக்கு தலைவலி வராம வேற என்ன வரும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த போட்டியைக் காண நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்திருந்தார். AK மற்றும் SK குடும்பத்தினர் CSK போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்த்தார்கள். இது தொடர்பான புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Ajith Kumar Asks Coffee between CSK s Worst Performance Against SRH IPL 2025 Video

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X