Ajithkumar: ரியல் துப்பாக்கியோடு 2025ஐ வழி அனுப்பிய தல அஜித்.. வீடியோவைப் பார்த்தால் அல்லு விடுதே

கோவை: நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். கார் ரேஸ், பைக் ரேஸ், பைக் ரைட் போன்றவற்றில் அவருக்கு ஆர்வம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், அஜித் தனது ரசிகர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் மனிதராகவே திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கொங்குநாடு ரைபில் கிளப்பில் அஜித் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்வது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகர் அஜித் அந்த வீடியோவில் விதவிதமான துப்பாக்கிகளில் தோட்டாக்களை நிரப்பி, இலக்கை நோக்கி சுடுகிறார். இதில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஷயம் என்றால் அஜித் துப்பாக்கிகளை கையாண்ட விதம் தான். கையடக்க துப்பாக்கிகள் தொடங்கி, மிகப்பெரிய துப்பாக்கிகள் என போன்றவற்றை அஜித் கையாளும் விதம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Ajith Kumar at Kongunadu Rifle Club Video Goes Trending
Photo Credit:

துப்பாக்கி: மேலும் தான் சுட்டது தொடர்பாகவும் அதாவது இலக்கில் ஒன்று முதல் 10 வட்டங்களுக்குள் அவர் எந்த அளவுக்கு ஒன்றாவது வட்டத்திற்கு நெருங்கி சுட்டுள்ளார் என்பதையும் காட்டுகிறார். இத்தனைக்கும் அஜித் கண்களுக்கு கூடுதல் லென்ஸ் என எதுவும் அணியாமல், சுட்டார். அப்படிச் சுட்டு மிகவும் துல்லியமாக அஜித் சுட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அஜித் ஏற்கனவே முறையாக துப்பாக்கி சுடுதல் பயிற்சியை, முடித்து உரிமம் பெற்றும், தனது தனி பயன்பாட்டுக்காக துப்பாக்கியும் வைத்துள்ளார். இது தொடர்பான அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில் அஜித் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலகாட்டில் அஜித்: அஜித் மற்றும் அவரது மகள் குறித்து இன்று காலையில் அதாவது டிசம்பர் 31ஆம் தேதி காலையில் கேரளா மாநிலம் பாலக்காடுக்கு அருகில் உள்ள், கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அஜித்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக கோவிலுக்கு வந்தார்கள். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்கவே அஜித்தின் மகள் அனோஷ்கா கொஞ்சம் பயந்துவிட்டார். அதன் பின்னர், அஜித் அனோஷ்காவை தனக்கு அருகில் அழைத்து நிற்கச் சொன்னார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. அதேபோல் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்கள் கூச்சலிட்டதும், இது கோவில் அமைதியாக இருங்கள் என்று காட்டமாகவும் எச்சரித்தார். கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டுத்தான் அஜித், கொங்குநாடு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X