பராசக்தி, ஜனநாயகன் ஒரு பக்கம் இருக்கட்டும்.. ரசிகர்களுக்கு அஜித்தின் அட்வைஸ்.. ஏகே வழி தனி வழிதான்

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடந்த வருடத்தில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் வந்தன. இரண்டு படங்களில் விடாமுயற்சி தோல்வியையும், குட் பேட் அக்லி வெற்றியையும் பெற்றன. அதிலும் அஜித் ரசிகர்களுக்கு மட்டும்தான் குட் பேட் அக்லி கொண்டாட்டமாக அமைந்தது. அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அவர் நடிக்கவிருக்கிறார். இப்போது கார் ரேஸில் பிஸியாகியிருக்கிறார்.

அஜித் எப்போதுமே வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கக்கூடியவர். ஆனால் கடந்த வருடத்தில் மட்டும் இரண்டு படங்களில் நடித்தார். முதலில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி மோசமான தோல்வியை தழுவியது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி ஏகே ரசிகர்கள் மட்டும் கொண்டாடும்படியாக இருந்தது. வசூலிலும் நல்ல ரெஸ்பான்ஸையே படம் பெற்றதாக படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்தது.

கார் ரேஸில் கவனம்: ஒரே வருடத்தில் அவர் இரண்டு படங்களில் நடித்ததற்கு கார் ரேஸ்தான் காரணம். ஏகே ரேசிங் டீம் என்ற அணியை தொடங்கி உலகம் முழுவதும் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுவருகிறார் அஜித். அவர் எங்கே ரேஸுக்காக சென்றாலும் அங்கே எல்லாம் ரசிகர்கள் மொய்த்துவிடுகிறார்கள். சினிமாவில் அவருக்கு கொடுத்த வரவேற்பு மாதிரியே ரேஸிலும் தங்களது முழு ஆதரவை ரசிகர்க்ள் கொடுத்துவருகிறார்கள்.

Ajith Kumar Balances Racing and Cinema Abu Dhabi Race Video and Advice to Fans Go Viral
Photo Credit:

அடுத்த படம்: அஜித்தின் லைன் அப்பை பொறுத்தவரை அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார். இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கலாம் என தெரிகிறது. அநேகமாக இந்த வருடம் ஷூட்டிங் தொடங்கி அடுத்த வருடம் படம் ரிலீஸாகும் என தெரிகிறது. படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் நாட்களில் வரலாம் என கூறப்படுகிறது. நிச்சயம் இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்படியாகத்தான் இருக்கும் என ஏகே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இப்போதைய ரேஸ்: இப்போது அவர் அபுதாபியில் இருக்கும் மரினா சர்க்யூட்டில் இந்த வருடத்துக்கான முதல் கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார். 24H சீரிஸ் - மிடில் ஈஸ்ட் டிராஃபிதான் இப்போது நடந்துவருகிறது. அந்தப் பந்தயத்தில் ரெட் ஆன்ட் ரேசிங் என்ற அணிக்காக களமிறங்கியிருக்கிறார் ஏகே. இதிலும் மற்ற போட்டிகளில் வென்றது மாதிரியே வெல்ல வேண்டும் என முழு முனைப்பில் கார் ஓட்டிவருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

ரசிகர்களுக்கு அட்வைஸ்: அவர் ரேஸுக்கு நடுவே பேசுகையில், "நான் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படுவதை நீங்கள் (ரசிகர்கள்) பார்க்க விரும்புகிறீர்கள். அதேபோல் நீங்களும் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படுவதை காண்பதற்கு நானும் விரும்புகிறேன்" என தெரிவித்தார். அவரது இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. கோலிவுட்டே பராசக்தி, ஜனநாயகன் பிரச்னை பற்றி பேசிக்கொண்டிருக்க; அஜித்தோ தனது ரசிகர்கள் மீது முழு அக்கறை வைத்து அவர்களை நல்வழிப்படுத்த தொடர்ந்து தனது வார்த்தைகள் மூலம் முயற்சிக்கிறார் என பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X