Ajith Birthday Special: அஜித் ரசிகர்கள் ஏன் மற்றவர்களை விட சிறந்தவர்கள்? அப்படி என்ன செஞ்சுட்டாங்க?
சென்னை: மே 1 என்றால் உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உழைப்பாளர்கள் தினத்துடன் தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. அஜித் இன்று தனது 55ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நடிகர் அஜித் மற்றும் அவரது ரசிகர்கள் தமிழ் சினிமா உலகில் ரொம்பவே வித்தியாசமானவர்கள், இன்னும் சொல்லப்போனால் தனி அடையாளத்திற்கு உரியவர்கள்.
இதற்கு முன்னர் உள்ள முன்னணி நடிகர்கள் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் தங்களது ரசிகர்கள் மூலம் சினிமாவைக் கடந்தும் எப்படி ஆதாயம் பார்ப்பது என்ற நோக்கில் செயல்பட்டனர் என்பது குறித்து தனித்து விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அஜித்தோ, தான் கண் அசைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கான ரசிகர்கள் பட்டாளம் தனக்கு இருந்த போது, அஜித் மீது இருந்த பிரியத்தின் பேரில் அவர்கள் வைத்த ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு, முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று கூறினார்.
இந்த முடிவு அஜித் ரசிகர்களை மட்டும் இல்லாமல், மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார், இனி இவரது படம் ஓடுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னர்தான் அவரது படத்திற்கு ரசிகர்கள் பல மடங்கு தியேட்டருக்கு வந்து, கிங் ஆஃப் ஓப்பனிங் என்ற அஜித்தின் அடையாளத்தை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

பொறுப்பான நடிகர்: இது தொடர்பாக ரசிகர்கள் கூறுவது, அஜித், எங்களை ஏதோ மற்ற நடிகர்களின் பேனரைக் கிழி, போஸ்டரைக் கிழி, மற்ற நடிகரின் ரசிகர்களுடன் சண்டையிடு, தனது புகழை தம்பட்டம் அடி என்று கூறவில்லை. மாறாக அவர் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு, போய் உங்கள் குடும்பத்தை பாருங்கள், படிப்பவர்கள் நன்றாக படியுங்கள், வேலைக்குச் செல்பவர்கள் இன்னும் நன்றாக வேலை செய்து உயர் பொறுப்புகளுக்குச் செல்லுங்கள், நன்றாக உழைத்து குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அஜித் வாழ்க, விஜய் வாழ்க, ரஜினி வாழ்க என்று சொல்லிக் கொண்டு இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறார்கள். நீங்கள் குடும்பத்துடன் நிம்மதியாக வாழுங்கள்" என்று கூறியவர் அஜித். நாங்கள் அஜித் என்ற நடிகரின் ரசிகர்கள் மட்டும் அல்ல, அஜித் என்ற நல்ல மனிதரைப் பின்பற்றுபவர்கள்.
அஜித் சொன்னால்: என்னதான் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறினாலும் சில ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் செய்யும் தவறுகளை அஜித் சுட்டிக் காட்டி அதைத் திருப்பதவும் செய்துள்ளார். அஜித் தவிர்க்கச் சொல்லி விட்டால் அதை பெரும்பாலும் அவரது ரசிகர்கள் கேட்டு பின்பற்றுகிறார்கள். அஜித்தே.. கடவுளே என்று குதூகலித்து கொண்டு இருந்த ரசிகர்களை, தவிர்க்கச் சொன்னதும் ரசிகர்கள் தங்களை கட்டுப் படுத்திக் கொண்டார்கள்.

ரசிகர்கள் வாழ்க்கை: அஜித் என்னதான் சொன்னாலும் சில ஆர்வக்கோளாறு ரசிகர்கள் அவரது கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, அண்மையில் ரீ ரிலீஸ் ஆன மங்காத்தா பட பேனர்களுக்கு கேம்பா அபிஷேகம் செய்வது என சேட்டைகளில் ஈடுபட்டு தான் வருகிறார்கள். இதற்கு அவர் ஒரு அறிக்கை விட்டால் அதுவும் கைவிடப்பட்டு விடும். அஜித் தனது வாழ்க்கையை அவரே செதுக்கியது போல, தனது ரசிகர்களின் வாழ்க்கையில் தன்னால் எந்த அளவுக்கு நன்மை செய்ய முடியோ அதைச் செய்து ரசிகர்களை சரியாக வழிகாட்டி வருகிறார். மே 1 அஜித்தின் பிறந்த நாள் என்றாலும், அஜித் ரசிகர்களை அங்கீகரிக்க வேண்டிய நாள்தான். இப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வழிநடத்தும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications