Ajith Kumar: தளபதி 69 அப்டேட்டுக்கு போட்டியா?.. அஜித்தின் சொகுசு கார் போட்டோ.. குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: நடிகர் அஜித் குமார் புதிதாக போர்ஷ் கார் வாங்கிய நிலையில், அதன் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் குமார் ஒரு தீவிரமான கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில் கூட சிகப்பு நிற கார் ஒன்றை வாங்கி அஜித் மின்னல் வேகத்தில் பறக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். அந்த படத்துடன் கூடவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே ஏகப்பட்ட சொகுசு கார்களை வாங்கி தனது கராஜில் அடுக்கி வைத்துள்ள அஜித் குமார் தற்போது விலையுயர்ந்த வெள்ளை நிற போர்ஷ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
புது கார் வாங்கிய அஜித்: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வரும் அஜித் குமார் திடீரென புதிதாக வெள்ளை நிற காஸ்ட்லியான போர்ஷ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி அஜித் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தளபதி 69 அப்டேட்டுக்கு போட்டியா தல?: நடிகர் அஜித் குமார் புதிதாக கார் வாங்கிய போட்டோவை சற்றுமுன் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த தளபதி ரசிகர்கள் தளபதி 69 படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வருதுன்னு சொன்னதுமே நினைத்தோம். இன்னும் போட்டோ ஏதுமே வரவில்லையே என இதோ வந்து விட்டது என கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
விடாமுயற்சி ரிலீஸ் எப்போ?: நடிகர் அஜித் குமார் சிகப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் கலர் கலரா புதுசு புதுசா சொகுசு கார்களை வாங்கி அடுக்கி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் இன்னும் எங்களுக்கு அந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் டேட் அப்டேட் கிடைக்கவில்லை ஏகே என புலம்பி வருகின்றனர்.
டபுள் தமாக்கா: அடுத்த ஆண்டு தான் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் இந்த தீபாவளிக்கு விடாமுயற்சி படம் வெளியாக வாய்ப்பில்லை என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











