Ajith Kumar Net Worth: 54வது பிறந்தநாள் கொண்டாடும் அஜித் குமார்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கு அதிபதியா?

சென்னை: நடிகர் அஜித் குமாரின் 54வது பிறந்தநாள் மே 1ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. நேற்று முதலே ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் அஜித் குமார் பத்ம பூஷன் விருது வென்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களூக்கும் அஜித் குமார் ஆண்டாகவே மாறிவிட்டது. ஜனவரி மாதம் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகாத நிலையிலும், கார் ரேஸிங்கில் அஜித் குமார் கில்லாடியாக செயல்பட்டு வெற்றிப் பெற்றதை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள்.

Ajith Kumar celebrates his 54th birthday here we look about his huge net worth and asset details

பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி பெண்களுக்கான படமாக வெளியாகி இருந்தது. ரசிகர்களுக்கு சரியாக கனெக்ட் ஆகாத நிலையில், ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும் தியேட்டர்களை திருவிழாவாக மாற்றினர். அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த வீரம் படம் இன்று ரீ ரிலீஸ் ஆகிறது.

அஜித் குமார் பிறந்தநாள்: 1971ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்த அஜித் குமார் கார் மற்றும் பைக் ரேஸிங்கில் ஆர்வம் செலுத்தி வந்தார். ஆனால், தமிழ்நாட்டின் டாப் நடிகராக மாறி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். அதன் பின்னர் தீனா படத்திலிருந்து 'தல' என அழைக்க ஆரம்பித்தனர். ஆனால், எந்தவொரு பட்டத்தையும் வைத்து தன்னை அழைக்க வேண்டாம் என அஜித் குமார் கட்டளையிட்ட நிலையில், சமீபத்தில் கடவுளே அஜித் என கோஷம் போட ஆரம்பித்தனர். அதற்கும் 'நோ' சொல்லிவிட்டார் ஜென்டில்மேன் அஜித் குமார்.

பத்ம பூஷன் விருது: தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச் சென்ற நடிகர் அஜித் குமாருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. விருது விழா நிகழ்ச்சிகள், தனது படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்லாத அஜித் குமார் பத்ம பூஷன் விருது வாங்கவும் செல்ல மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிப்பது, பத்ம பூஷன் விருது வாங்குவது, நேஷ்னல் மீடியாவுக்கு பேட்டியளிப்பது என ஏகப்பட்ட மாற்றங்களுடன் காணப்படுகிறார்.

Ajith Kumar celebrates his 54th birthday here we look about his huge net worth and asset details

ஹீரா விவகாரம்: பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட அதே நாளில் அஜித் பெயரை குறிப்பிடாமல் நடிகை ஹீராவின் வெப்சைட் என ஒரு வெப்சைட்டில் போடப்பட்ட பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த வெப்சைட்டே ஃபேக்கான வெப்சைட் என்றும் அஜித் குமாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இதை சிலர் பரப்பியுள்ளனர் என அஜித் ரசிகர்கள் எந்தவொரு நெகட்டிவிட்டிக்கும் இடம் கொடுக்காமல் சப்போர்ட் செய்ய ஆரம்பித்தனர். சென்னை விமான நிலையத்துக்கு வந்த அஜித் குமார் கூடிய சீக்கிரமே ரசிகர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து மதிப்பு: நடிகர் அஜித் குமார் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு தலா 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் 2 இடங்களில் பங்களா வீடு, துபாயில் வீடு என ஏகப்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரரான அஜித் குமாரிடம் ஒட்டுமொத்தமாக 350 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள்ன. பிரைவேட் ஜெட் விலை மட்டுமே 25 கோடி ரூபாய் என்கின்றனர். மேலும், விலையுயர்ந்த கார்கள், பைக்குகள் என ஏகப்பட்ட சொத்துக்கள் அஜித்துக்கு சொந்தமாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X