யப்பா.. வெளிநாட்டு பெண்ணுடன் வேறமாறி டான்ஸ்.. மகள் பிறந்தநாளை துபாயில் கொண்டாடும் அஜித் குமார்!

துபாய்: நடிகர் அஜித் குமார் துபாயில் தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். இரவு நேரத்தில் சொகுசு படகில் அஜித் குமார் குடும்பத்துடன் செம ஹேப்பியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டுக் கொண்டு தல என கத்தியதும் கையசைத்த நடிகர் அஜித் அந்த ரசிகர்களுடன் படகை விட்டு இறங்கியதும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இந்நிலையில், அஜித்தின் இன்னொரு டான்ஸ் வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.

அஜர்பைஜானில் நடிகர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் ஈடுபட்ட வந்த நிலையில், திடீரென புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் பிரேக் விட்டுள்ளனர். அதற்கு பின்னணியில் சில பஞ்சாயத்துகளும் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் துபாயில் வாங்கி உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் என்ஜாய் செய்து வருகிறாராம் அஜித் குமார்.

Ajith Kumar dance with a foreign girl at Dubai video goes trending

விடாமுயற்சிக்கு என்னாச்சு?: லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படம் ஆரம்பமானதில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருப்பதாகவும் இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் அஜித் இடையே சிறிய மனஸ்தாபம் என்றும் சமீபத்தில் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்ட நிலையில், அடுத்து புதிய பிரச்சனை ஒன்று உருவாகி இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதெல்லாம் இல்லை என்றும் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவே நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மகள் பிறந்தநாள்: நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினியின் மூத்த மகளான அனோஷ்காவின் 16வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகள் பிறந்தநாளை கோலாகலமாக இந்த ஆண்டு துபாயில் கொண்டாடி வரும் அஜித் குமாரின் சில வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Ajith Kumar dance with a foreign girl at Dubai video goes trending

வெளிநாட்டுப் பெண்ணுடன் டான்ஸ்: ஒரு இடத்தில் பார்ட்டி வைத்து அனைவரும் உணவு உண்ணும் வேளையில் அங்கே வந்த வெளிநாட்டுப் பெண்ணுடன் துணிவு படத்தின் "சில்லா சில்லா" பாடலுக்கு அஜித் குமார் நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. முதலில் கேமரா இல்லை என ஆட்டம் போடும் நடிகர் அஜித் குமார் திடீரென வெளியாட்கள் கேமராவில் தன்னை படம் பிடிப்பதை அறிந்து அஜித் குமார் உடனடியாக ஆட்டம் போடுவதை நிறுத்தி விட்டு கை தட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

விஜயகாந்த் மறைவுக்கு வரல: நடிகர் அஜித் குமார் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவும் இல்லை சமூக வலைதளத்தில் தனது மேனேஜர் மூலமாக எந்தவொரு இரங்கல் அறிக்கையும் கொடுக்கவும் இல்லை என்றும் ஜாலியாக தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் ஆட்டம் போட்டு வருகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு ஒரு சின்ன அப்டேட் கூட தரவில்லை என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X