ஏகே 64ல் அஜித் செய்யப்போகும் சம்பவம் இதுவா?.. ஏகே புது ரூட்டுல போறாரே ப்பா
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றது. குட் பேட் அக்லியை பொறுத்தவரை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் விமர்சன ரீதியாக படம் பலத்த அடியை சந்தித்தது. இருப்பினும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. அஜித்தின் 64ஆவது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமார் இந்த வருடத்தில் இரண்டு படங்கள் நடித்திருந்தார். ஒரே வருடத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாவது நீண்ட காலத்துக்கு பிறகு இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் விடாமுயற்சி படம் ஏகே ரசிகர்களை கவரவில்லை. அஜித்துக்கு மாஸ் சீன்களே இல்லை என்பதால்தான் அந்தப் படத்தை அவர்கள் ரசிக்கவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி: அதேசமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் ஏகே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இயக்குநரே அடிப்படையில் அஜித்தின் ரசிகர் என்பதால்; ஒரு பக்கா ஃபேன் பாய் படமாக அதனை எடுத்திருந்தார். ஆனால் படத்தின் கதையிலும், மேக்கிங்கிலும் ஒன்றுமே இல்லை என்பதுதான் பொதுவான ரசிகர்களுடைய வலுவான கருத்தாக இருந்தது.
ஓவர் டோஸ் கொடுத்துவிட்ட ஆதிக்: மேலும் படம் முழுக்க அஜித் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வைத்திருந்தார். அது கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர் டோஸ் ஆகிவிட்டது. ஒருகட்டத்தில் சலிப்பும் தட்ட ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரெட்ரோ பாடல்களை பயன்படுத்துகிறேன் என்கிற பெயரில் சம்பந்தமே இல்லாமல் ப்ளேஸ் செய்திருக்கிறார் என்பதும் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. இருப்பினும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அடுத்த படம்: அடுத்தும் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் படம் இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. அது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தி ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கலாம் என்றும்; இது துறைமுகத்தை அடிப்படையாக வைத்து உருவாகக்கூடிய கதை என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
புது ரூட்டில் ஏகே?: இந்நிலையில் ஏகே 64 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்துக்கு அஜித் சம்பளம் வாங்காமல்; படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் விற்பனையில் எவ்வளவு வருகிறதோ அவ்வளையும் சம்பளமாக வாங்க திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்கு ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் ஒத்துக்கொண்டார் என்றும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ, ஏகே புது ரூட்டில் போறாரே ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











