அஜித் எம்டன் அப்பா மாதிரி திட்டீட்டே இருப்பாரு.. ரத்தக்கண்ணீர் சிந்தாத குறையாக குமுறிய AK ரசிகர்
சென்னை: நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது விளம்பரங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தனது கார் ரேஸ்க்காகவும், கார் ரேஸை இந்தியாவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் விளம்பரங்களில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டுள்ளார். இதில் முதலாவதாக கேம்பா விளம்பரத்தில் நடித்துள்ளார். இது அஜித் ரசிகர்கள் பலராலுமே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் அஜித் ரசிகர் ஒருவர் விஜய் ரசிகராக இருப்பதைக் காட்டிலும் அஜித் ரசிகராக இருப்பதுதான் சிரமம் என்று புலம்பித் தள்ளிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில், " ஜன நாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் என்னடா ரொம்ப அழுகுறீங்க. அப்படினா அஜித் ரசிகர்களை என்னவென்று சொல்வது?. உங்க ஆளோட கடைசி ஆடியோ லான்ச் என்று வருத்தமாக இருக்குறீர்களே? கடைசியாக எங்க ஆளுக்கு எப்போது ஆடியோ லாஞ்ச் நடந்தது என்று சொல்லுங்கடா? ஆடியோ லான்ச் எங்களுக்கு நடந்து இருக்கா? என்னங்கடா ரொம்ப அழுகுறீங்க. நாங்கள் அதை எல்லாம் தாங்கி தானே நின்றிருக்கிறோம்.
அஜித்தை பார்த்தே பயம்: உங்க ரசிகர்கள் எல்லாம் திமுகவைப் பார்த்தால் தானே பயப்படுவீங்க. நாங்க எல்லாம் அஜித்தைப் பார்த்தாலே பயப்படுவோம். உலகத்தில் எந்த ரசிகராவது அவர்களின் அபிமான நடிகரைப் பார்த்து பயந்தது உண்டா? நாங்க பயப்படுகிறோம். உனக்கும் உன் அண்ணனுக்கும் அண்ணன் தம்பி உறவு. ஆனால் எனக்கும் அவருக்கும் அப்பா பையன் உறவுடா. அதுவும் சாதாரண அப்பா இல்லை, எம்டன் அப்பா. எப்ப பாரு திட்டிட்டே இருப்பாரு டா.

ஒன் சைடு லவ்வு: நீங்க எப்படிடா ஆரம்பிச்சீங்க, இளைய தளபதினு ஆரம்பிச்சீங்க, அதன் பிறகு, தளபதி, அதன் பிறகு தவெக தலைவர், அடுத்து முதலமைச்சர்னு சொல்லீட்டு இருக்கீங்க. நாங்க அல்டிமேட் ஸ்டார்னு ஆரம்பிச்சோம்டா, அப்படி கூப்பிடாதனு சொன்னாரு, சரினு சொன்னோம். தலனு கூப்பிட்டோம் அதுவும் வேண்டாம் என்று சொன்னார். அதன் பின்னர் அஜித் குமார்னு கூப்பிட்டோம், அதுவும் வேண்டாம் AKனு மட்டும் கூப்பிடுனு சொல்லிட்டாரு. நாளைக்கு அப்படியும் கூப்பிட வேண்டாம் என்று சொல்லப் போகிறார். நாங்கள் எதுவுமே இல்லாமல் சுத்தப் போகிறோம். உனக்கும் விஜய்க்கும் டபுள் சைடு லவ்வுடா. ஆனால் எனக்கும் அவருக்கும் ஒன் சைடு லவ்வுடா. நாங்கள் எல்லாம் அழ ஆரம்பித்தால் ஒரு வருஷத்துக்கு அழனும் டா.. சைலண்ட்டா இருந்துக்காங்கடா" என்று தனது மனதில் உள்ளதை குமுறி உள்ளார். இவரது இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











