Ajithkumar: தல அஜித்திடம் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள் என்ன தெரியுமா? இதோ ஒரு ஷார்ட் லிஸ்ட்!

சென்னை: நடிகர் அஜித் குமார் கிட்டத்தட்ட கடந்த 33 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ளார். சினிமா பின்புலமும் இல்லாமல் போட்டி நிறைந்த சினிமா உலகத்திற்குள் நுழைந்த அஜித் குமார், இந்த திரையுலகில் உச்சத்தையும் பார்த்துவிட்டார், சரிவையும் பார்த்துவிட்டார். நடிகராக, தனது ரசிகர் மன்றத்தை ஒரே நாளில் கலைத்தார் அஜித். ஆனாலும் அவர் படங்கள் ரிலீஸ் ஆகும்போது திரையரங்குகள் திருவிழாக் கோலம் போடுகின்றன. அதற்கு காரணம் அஜித் குமார் என்ற ஒரு மனிதன் மீது இருக்கும் அன்புதான், அன்பு மட்டும்தான். அஜித்திடம் இருந்து அவரது ரசிகர்களும் சக மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அஜித் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். அஜித்திற்கு அவரது ஆரம்ப கால சினிமா மிகவும் ச்வாலானதாக அமைந்தது. அதுவும், அவருக்கு ஏற்பட்ட பைக் விபத்திற்குப் பின்னர் அவருக்குச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரால் படங்களில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. அதில் இருந்து மீண்டு வந்த பின்னர்தான் தமிழ் சினிமாவில் தனக்கான சாம்ராஜ்யத்தை படைத்துள்ளார் தல அஜித்.

1. முயற்சி: அஜித் குமார் என்றாலே முயற்சிதான். அவரது விடாமுயற்சியால் தான் இன்றைக்கு இந்த உயரத்தில் உள்ளார். இவரது சினிமா கெரியரில் ஆரம்பத்தில் சில படங்கள் மட்டுமே ஹிட் அடித்தது. அப்படியான நிலையில் கூட விடாமல் முயற்சி செய்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாகியுள்ளார். தற்போது அவரது அஜித் குமார் ரேஸிங் அணி ஜி.டி 4 வகை ரேஸில் களமிறங்கி போட்டி போட்டு வருகிறது. இந்த ரேஸின் பயிற்சியின் போது அவரது கார் பெரும் விபத்துக்கு உள்ளானது. ஆனாலும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், அவரது அணி துபாய் ரேஸில் 3வது இடம் பிடித்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

Ajith Kumar Fans Should Follow AK s Personalities on Their Day Today Life

2. உழைப்பு: ஒரு கட்டம் வரை தனது படங்களின் மிகவும் சிரமமான சண்டைக் காட்சிகளில் டூப் வைத்து நடித்து வந்த அஜித் குமார், அதன் பின்னர் எவ்வளவு பெரிய ரிஸ்க்கான காட்சியாக இருந்தாலும் நானே நடிக்கிறேன் என முடிவெடுத்து நடித்து வருகிறார். ஒரு காட்சியில் நடிக்கும் போது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றால், அந்த விபத்தை நானே எதிர்கொள்கிறேன். அந்த காட்சியில் நடித்தால் பாராட்டுகள் வருவதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றால், விபத்துகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு சென்றுவிட்டார். இது அவரது உழைப்புக்கு எடுத்துக்காட்டு.

3. நேர்மை: நேர்மையான சினிமா நடிகர் என்றால் அது அஜித் தான் என தமிழ்நாட்டைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளே அவருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்கள். காரணம் வருமான வரி ஒழுங்காக கட்டுகிறார். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஒரு ரூபாய் பாக்கி இல்லாமல் கட்டுகிறார் என்பதுதான். இது தொடர்பாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் பொது மேடையில் பேசியுள்ளார்.

Ajith Kumar Fans Should Follow AK s Personalities on Their Day Today Life

4. சிறந்த குடும்பத் தலைவன்: அஜித்துக்கு எப்போதுமே அவரது குடும்பம் தான் முதன்மை. தனது குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார், எந்த எல்லைக்கும் போவார். காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித் திருமண வாழ்க்கை குறித்தோ, அல்லது அஜித் குறித்தோ நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் படியான கிசுகிசுக்கள் இதுவரை வந்தது கிடையாது. உடன் நடித்த நடிகைகள் அஜித்தை ஜென்டில்மேன் என பாராட்டியுள்ளார்கள். தனது ரசிகர்களையும் குடும்பத்தை பாருங்கள் என அறிவுரை கூறியவர் அஜித்.

5. எண்ணம் போல் வாழ்க்கை: அஜித்திற்கு தனது மனதிற்கு எது நிம்மதியைத் தருகிறதோ, எது மகிழ்ச்சியைத் தருகிறதோ அதைச் செய்ய அவர் ஒருநாளும் தவறியதில்லை. பைக்கை எடுத்துக் கொண்டு நாடு நாடாக சுற்றுவார். உடன் வேலை செய்பவர்களுக்கு படப்பிடிப்புத் தளத்தில் அவரே பிரியாணி செய்து கொடுப்பார். துப்பாக்கி சுட முறையான பயிற்சி எடுத்து, லைசென்ஸ் வாங்குவார். மினி விமானங்களை இயக்க கற்றுக் கொள்வார், கற்றுக் கொடுக்கவும் செய்வார். சினிமா புகழே போதும் என இருக்காமல், தன்னை எப்போதும் சகலகலா வல்லவனாக தகவமைத்து வருகிறார்.

Ajith Kumar Fans Should Follow AK s Personalities on Their Day Today Life

6. தலைக்கனம் அற்ற அஜித்: அஜித் மிகவும் சவால்களை எதிர் கொண்டு தான் இன்றைக்கு மிகப்பெரிய ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார். ஆனால் ஒருபோதும் தலைக்கனம் கொண்டவராக அவர் இருந்ததில்லை. இளம் நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்கள் வரை அனைவருக்கும் உரிய மரியாதை அளித்து பழகுகிறார் என மற்ற நடிகர்கள் கூறிக் கேட்டுள்ளோம்.

7. தைரியம்: அஜித்திடம் இருக்கும் இன்னொரு குணம் தைரியம். இவரது தைரியத்திற்கு பல சம்பவங்களை எடுத்துக் கூறலாம். அதில் ஒரு சம்பவம்தான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் மிரட்டித்தான் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்கிறார்கள் எனக் கூறினார். அஜித் இப்படி பேசும்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அருகில் அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து கைதட்டினார்.

8. மரியாதை: அஜித் தமிழ் திரையுகின் உச்சத்தில் உள்ளார். நேற்று வரை நம்முடன் நன்றாக பேசி பழகிய நண்பர்களோ உறவினர்களோ, அவர்களின் அந்தஸ்து நம்மை விட கொஞ்சம் அதிமாகிவிட்டால் அவர்களின் நடவடிக்கை, அவர்கள் நம்மை அனுகும் முறையில் மாற்றம் என்பது இருக்கும். அப்படியானவர்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் அப்படியான குணத்தைக் கொண்டவர் இல்லை என்பது மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால், ஒருவரை அஜித் சந்திக்கிறார் என்றால் அவர் வயதில் தன்னைவிடக் குறைவானவராக இருந்தாலும் அவர்களுக்கும் மரியாதை கொடுத்து பழகக் கூடியவர். அதேபோல், பெண்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கத் தெரிந்த மனிதராக அஜித் திகழ்கிறார்.

Ajith Kumar Fans Should Follow AK s Personalities on Their Day Today Life

இப்படி அஜித்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள் என பல விஷயங்கள் உள்ளது. தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு நொடியையும் நானா செதுக்கியது என அஜித் பில்லா படத்தில் கூறுவதைப் போல தன்னை தானே செதுக்கி உள்ளார் அஜித்குமார். அவரது ரசிகர்கள் அவரிடத்தில் இருக்கும் குணங்களை தாங்களும் பின்பற்றினால் அது அஜித்திற்கு பெருமை சேர்க்கும். அஜித் இன்ஸ்பிரேஷன் மட்டுமல்ல அஜித் ஒரு எமோஷன் என ரசிகர்கள் அவரை கொண்டாட காரணங்களும் இவைதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X