நாங்க வேறமாறி.. குட் பேட் அக்லி FDFS கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்.. அடிபொலி!

சென்னை: பொதுவாக புதுப்படத்தின் FDFS கொண்டாட்டத்தை அதிகாலையில், அல்லது இரவு நேரங்களில் கூட ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ள அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் FDFS கொண்டாட்டத்தை அஜித் ரசிகர்கள் இப்போதே ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

விடாமுயற்சி படத்துக்கு முன்னதாக குட் பேட் அக்லி படம் வந்திருக்க வேண்டியது என்றும் தேவையில்லாமல் லைகா விடாமுயற்சி படத்தை முதலில் விட்டு கெடுத்துவிட்டது என ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் குறை கூறிக்கொண்டிருந்தாலும், தமிழ்நாடு தல நாடு தான் எங்களுக்கு என ஆஃப் லைன் அஜித் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

Ajith Kumar fans started Good Bad Ugly FDFS celebration at Vellore Alankar theater

ஆதிக் ரவிச்சந்திரன் பக்காவான ஃபேன் பாய் சம்பவத்தை நாளை திரையரங்குகளில் காட்டப் போவது உறுதி என இன்சைட் ரிப்போர்ட்டுகள் எல்லாம் இப்போதே பாசிட்டிவாக வெளியாகி அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கியுள்ளது.

ஆல் டைம் பிளாக்பஸ்டர்: இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே ஆல் டைம் பிளாக்பஸ்டர் படமாக குட் பேட் அக்லி இருக்கப் போகிறது என ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் ட்வீட் போட்டு அஜித் ரசிகர்களை மேலும், உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு தேவையில்லாத ஹைப் கொடுக்காமல் அடக்கி வாசித்த நிலையில், நாளை அவரை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்கின்றனர்.

திரையரங்கில் FDFS கொண்டாட்டம் ஆரம்பம்: வேலூரில் உள்ள அலங்கார் தியேட்டரில் இப்போதே டிஜே மியூசிக் எல்லாம் வச்சு, ஆடாம ஜெயிச்சோமடா, நாங்க வேறமாறி, ஆலுமா டோலுமா என அஜித் பட பாடல்களை போட்டு அட்டகாசமாக FDFS கொண்டாட்டத்தை அஜித் ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர். நாளை காலை 9 மணிக்குத்தானே படம் என்றும் இப்போதே அஜித் ரசிகர்கள் இப்படி செலிபிரேட் பண்றாங்களே என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

பல ஊர்களில் திருவிழா: நாளை மஹாவீர் ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. தமிழ் புத்தாண்டு விடுமுறை திங்கட்கிழமை வரும் நிலையில், வியாழன் முதல் திங்கள் வரை என தொடர்ந்து 5 நாட்களும் பல ஊர்களில் திருவிழாவாகத்தான் இருக்கப் போகிறது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X