Campa விளம்பரத்தில் நடித்த அஜித்.. எதிர்க்கும் ரசிகர்கள்.. கடவுளேன்னு கத்துனவங்களா இப்படி?

சென்னை: நடிகர் அஜித் குமாரை அல்டிமேட் ஸ்டார் என்றும் காதல் மன்னன் என்றும் ஆரம்பத்தில் ரசிகர்கள் கொண்டாடினர். தீனா படத்திற்கு பிறகு 'தல' என்கிற அடைமொழியுடன் ரசிகர்கள் அஜித் குமாரை கொண்டாட ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் ரசிகர் மன்றங்கள் தனக்காக வைக்கப்பட்டதை பார்த்து சந்தோஷப்பட்ட அஜித் குமார், ஒரு கட்டத்துக்கு மேல், அதையெல்லாம் வேண்டாம் என கலைத்து விட சொல்லிவிட்டார். பின்னர், தல என்று தன்னை யாரும் அழைக்கக் கூடாது என்றும் உத்தரவு போட்டார்.

Ajith Kumar fans trolls Ajith for done Campa advertisement

கடவுளே அஜித்தே என விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சர்வதேச அளவில் அலப்பறையை கிளப்ப அதற்கும் உடனடியாக கண்டனம் தெரிவித்தார். ஆனால், தற்போது அஜித்தை கடவுளாக பார்த்த ரசிகர்களே அவர் விளம்பரப் படம் ஒன்றில் நடித்ததை பார்த்து அவரை திட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட புரொமோஷனுக்கு வரமாட்டேன்: அஜித்துக்கு விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் 100 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்தும் கூட அந்த படங்களின் புரமோஷனுக்கு கூட அஜித் குமார் வரவில்லை. எந்தவொரு ஆடியோ லான்ச்சும் நடத்தவில்லை. ஜன நாயகன் படம் வெளியாகாமல் இருக்கும் நிலையிலேயே, ஆடியோ லான்ச் மூலமாக ஒரு கணிசமான பெரிய தொகையை விஜய் கேவிஎன் நிறுவனத்துக்கு சம்பாதித்து கொடுத்துள்ளார் என்கின்றனர்.

திடீர் விளம்பரம்: பல வருடங்களாக விளம்பரங்கள் மற்றும் பட புரொமோஷன்களுக்கு 'நோ மீன்ஸ் நோ' என சொல்லி வந்த அஜித் குமார் தனது ஏகே ரேசிங் கம்பெனியின் ஸ்பான்சர்ஷிப்புக்காக அம்பானியின் கேம்பா விளம்பரத்தில் நடித்தது அவரது ரசிகர்களையே ஷாக் ஆக்கியுள்ளது. கேசரியையே கிண்டி கொடுத்தாலும் விஜய் ரசிகர்கள் தனது தளபதிக்காக அரணாக இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் அவரையே அட்டாக் செய்து சோஷியல் மீடியா முழுவதும் ஏகப்பட்ட எதிர்ப்பலைகளை உருவாக்கி உள்ளது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடவுளேன்னு சொன்னவங்களா இப்படி?: "கடவுளே அஜித்தேன்னு" கத்தினவங்களா இப்போ அஜித்தையே கண்டித்து பல போஸ்ட்டுகளை போட்டு வருகின்றனர் என விஜய் ரசிகர்களே ஷாக் ஆகும் அளவுக்கு தப்புன்னா தப்பு தான் என அஜித் ரசிகர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியும் தயாரிப்பாளர்கள் காசு போட்டு தானே உங்களை வச்சு படம் பண்ணாங்க, அவர்களுக்காக ஒரு முறையாவது இறங்கி போகாத நீங்க உங்க சொந்த ரேசிங் கம்பெனி என்றதும் இப்படி குளிர்பான விளம்பரத்தில் நடிக்கலாமா? என சட்டையை பிடித்து உலுக்காத குறையாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X