Ajith Kumar salary: அஜித் சம்பளத்தை இப்படித்தான் வாங்குறாராம்.. இப்போ அவரோட சம்பளம் இத்தனை கோடியா?

சென்னை: தளபதி விஜய்யின் சம்பளம் தளபதி 69 படத்துக்கு 275 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அஜித் குமாரின் சம்பளம் குறித்த லேட்டஸ்ட் தகவல்களும் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் குமார் தான் 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை வாங்கி வருகின்றனர்.

200 கோடி ரூபாய் சம்பளத்தை கோட் படத்திற்கு வாங்கியதன் மூலம் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து ரஜினிகாந்த் 175 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறுகின்றனர்.

ajith kumar salary good bad ugly

விடாமுயற்சி படத்துக்கு 105 கோடி ரூபாய் சம்பளம் அஜித் குமாருக்கு பேசப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், குட் பேட் அக்லி படத்துக்கு அஜித் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார் என்கின்றனர்.

100 படங்கள்: மலையாளத்தில் 100 கோடி ரூபாயில் 100 படங்கள் உருவாக்கி விடலாம். தமிழில் வாழை, லவ் டுடே உள்ளிட்ட படங்கள் 5 கோடியில் எடுக்கப்பட்டு 40, 50 கோடிகள் வசூலை அள்ளியுள்ளன. ஆனால், பல வருடங்களாக ரசிகர்களின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி முன்னணி ஹீரோக்களாக இருக்கும் ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட நடிகர்கள் 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை வாங்கி வருகின்றனர். இவர்களை வைத்து படங்களை இயக்கினாலே சுமார் 300 முதல் 400 கோடி பட்ஜெட் இருந்தால் மட்டும் தான் முடியும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

அஜித்தின் சம்பளம்: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்திற்காக 105 கோடி சம்பளம் அஜித் வாங்குவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்துக்காக நடிகர் அஜித் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படித்தான் வாங்குறாரா?: நடிகர் அஜித் குமார் தனது படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொறுத்து சம்பளத்தை வாங்குவதில்லையாம். அந்த படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் எந்தளவுக்கு விற்பனையாகிறதோ அதை வைத்து தான் அவரது சம்பளத்தை ஃபிக்ஸ் செய்வதாக கூறுகின்றனர். குட் பேட் அக்லி திரைப்படம் எந்தவொரு தாமதமும் இன்றி சொன்னது போலவே பொங்கல் 2025க்கு வரவுள்ள நிலையில், அதன் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் 150 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அஜித்தின் சம்பளம் 150 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

விஜய் சென்றுவிட்டால்?: சினிமாவை விட்டு தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் சென்று விட்டால் நிச்சயம் நடிகர்களின் சம்பளத்தில் பெரியளவு சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்றும் கூறுகின்றனர். ரஜினிகாந்த், அஜித்தை தவிர்த்து 100 கோடி நாயகர்களாக யாரும் விரைவில் வரமாட்டார்கள் என்றும் ஹீரோக்களின் சம்பளம் கணிசமாக உயராமல் குறைந்து விடும் நிலையும் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X