ரசிகர்கள் தொந்தரவை தவிர்க்க அஜீத் ஐடியா... வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ரெடி

Recommended Video

Anikha joins Thala 60

சென்னை: அஜித்குமார் தற்போது தனது வீட்டிலேயே டப்பிங் பேசுவதற்காக ஒரு தியேட்டரை கட்டியுள்ளாராம். இனி வீட்டிலேயே தனது படங்களுக்கு டப்பிங் பேசுவார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களால் ஏற்படும் தொந்தரவை தவிர்க்கவே இந்த ஐடியாவாம். அஜித்குமார் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது இல்லத்திலேயே டப்பிங் ஸ்டூடியோ வைத்துள்ளார். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, தல அஜித்தும் சூப்பர்ஸ்டாரின் பாலிசியை பின்பற்றுகிறார் என்றும் பேசப்படுகிறது.

பொதுவாகவே நடிகர்கள் யாரையாவது ரசிகர்கள் பொது இடங்களிலோ அல்லது படப்பிடிப்பின் போதோ பார்க்க நேர்ந்தால் உடனே அவர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்து கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு ரசிகனின் தலையாய செயல்.

Ajith Kumar following Superstar Rajini’s Policy

ஒரு சிலர் அத்துமீறுவதும் உண்டு. இது படப்பிடிப்பு களத்தையுமே கூட தொந்தரவு செய்யும் சூழல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது போன்ற செயல்களை தவிர்ப்பதற்காக பல கதாநாயகர்கள் படப்பிடிப்பை பிற மாநிலங்களில் வைத்து கொள்வது வழக்கம்.

இதைப் போல மற்ற மாநிலங்களில் ஷூட்டிங் வைத்து கொள்ள விரும்புவது நம்ம தல ஸ்டைல். அவரை பார்த்தவுடன் யார் தான் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். அவரை தலையில் தூக்கி வைத்து அல்லவா கொண்டாடுவார்கள்.

அது போன்ற இடைஞ்சல்களை படப்பிடிப்பின் போது தவிர்ப்பதற்காக நடிகர் அஜித் குமார் பெரும்பாலும் படப்பிடிப்பை மற்ற மாநிலங்களில் வைத்துக்கொள்ள விரும்புவார். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சூட்டிங் வைத்துக்கொள்வார். மற்றபடி டப்பிங் பேசுவதற்காக மட்டுமே வெளியில் வருவது வழக்கம். அதுவும் இரவில்தான் டப்பிங் பேசுவார். அதையும் மோப்பம் பிடிக்கும் ரசிகர்கள் அஜீத்தை காண கூடிவிடுவார்கள். இதை தவிர்க்க ஐடியா செய்து விட்டார் அஜீத்.

இனி டப்பிங் பேசக்கூட அஜித்குமார் வெளியே வரமாட்டாராம். தற்போது தனது இல்லத்திலேயே டப்பிங் செய்வதற்காக ஒரு தியேட்டரை கட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது இல்லத்திலேயே டப்பிங் ஸ்டூடியோ வைத்துள்ளார். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, தல அஜித்தும் சூப்பர்ஸ்டாரின் பாலிசியை பின்பற்றுகிறார் என்றும் பேசப்படுகிறது. இருப்பினும் தனியாக டப்பிங் செய்வதால் ஒரு பிரைவசி, தனிமை இருப்பதால் டப்பிங் பேசுவதில் முழு கவனம் செலுத்தி, மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்பது சூப்பர்ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் இவர்களின் கருத்தாகும்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறார் அஜீத். அந்த படத்திற்கு வீட்டில் தனது ஸ்டுடியோவில்தான் டப்பிங் பேசுவார் அஜீத். சினிமாவில் நடிப்பதோடு சரி எந்த புரமோசனுக்கும் அஜீத் வெளியே தலைகாட்டுவதில்லை. ஆடியோ வெளியீடு, ட்ரெயிலர் வெளியீட்டிற்கும் கூட வருவதில்லை அதை ஒருபாலிசியாகவே வைத்திருக்கிறார் அஜீத். இனி டப்பிங் பேசக்கூட வெளியே வரமாட்டார் அஜீத். தனிமைக்கு தனிமையும் ஆச்சு... வருமானத்திற்கு வருமானமும் ஆச்சு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X