ஒரு செகண்ட் அமைதியாக நின்ற அஜித்.. என்ன பணிவு.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ !

சென்னை : அஜித்தை விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிராண்டாகி வருகிறது.

Recommended Video

ஒரு செகண்ட் அமைதியாக நின்ற அஜித்.. என்ன பணிவு.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ !

இயக்குநர் எச்.வினோத்துடன் அஜித் தொடர்ந்து 3வது முறையாக ஏகே 61 படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேவில் விரைவில் நடைபெற உள்ளது.

எச் வினோத்

எச் வினோத்

சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர் எச். வினோத். இதன்பின்னர் கார்த்திக்கை வைத்து அவர் உருவாக்கிய தீரன் அதிகாரம் ஒன்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த இரு திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். இந்த படம் இந்தியில் உருவான பிங்க் என்ற படத்தின் ரீமேக்காகும்.

வலிமை கலவையான விமர்சனம்

வலிமை கலவையான விமர்சனம்

நேர்கொண்ட பாதை திரைப்படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை கொடுத்து இருந்தார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பைக் சாகசங்கள் என படம் முழுக்க மிகவும் அதிரடியாக இருந்தது. எச் வினோத் திரைப்படங்களில் சென்டிமெண்ட் காட்சிகள் இருக்காது ஆனால், வலிமை படத்தில் அம்மா சென்டிமெண்ட், தம்பி சென்டிமெண்ட் இருந்ததால் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஏகே 61

ஏகே 61

அஜித் மற்றும் எச் வினோத் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் உண்மைச் சம்பவங்களின அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு ரிலீஸ்?

தீபாவளிக்கு ரிலீஸ்?

ஏகே 61 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது. இரண்டாம் கட்டபிடிப்பு பூனேவில் தொடங்க உள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்துவிட்டு, தீபாவளிக்கு திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிராண்டாகும் வீடியோ

டிராண்டாகும் வீடியோ

இந்நிலையில், அஜித்தை விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிராண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் வெள்ளை நிற சட்டையும், கறுப்பு நிற பேண்டும் அணிந்திருக்கிறார். மேலும், கறுப்பு நிறத்தில் மாஸ்க் அணிந்திருந்தார்.

பணிவுடன் நிற்கும் அஜித்

விமான நிலையத்தில் அதிகாரி சோதனை செய்யும்போது நான் அஜித் என்று சொல்லாமல், ஒரு செகண்ட் அமைதியாக நின்று, இரு கைகளையும் உயர்த்தி பணிவுடன் நிற்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த பணிவுதான், அஜித் இந்த உயர்ந்த இடத்திற்கு வர காரணம் என்று கூறி அஜித்தின் ரசிகர்கள் இந்த வீடியோவை டிராண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X