ஆத்தி.. ரேஸ் கார் என்னம்மா இப்படி இருக்குது.. பிரான்ஸ் நாட்டில் அஜித் குமார்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: நடிகர் அஜித் குமார் தனது அடுத்த கார் பந்தயத்துக்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அங்கே அவருடைய புதிய ரேஸ் கார் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமார் கலந்துக் கொண்டார். அவருடைய அஜித் குமார் ரேஸிங் அணி 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

விடாமுயற்சி படம் ரிலீஸ் ஜனவரி மாதம் ஆகவில்லை என்றாலும் அஜித் குமார் ரேஸ் கார் ஓட்டிய அழகை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். அதே சமயம் அவரது கார் பயிற்சியின் போதும் அதன் பின்னரும் ஒருமுறை விபத்தில் சிக்கியதை பார்த்து ரசிகர்கள் துடி துடித்துப் போனார்கள்.

Ajith Kumar Ajith Kumar racing hero

அஜித் குமார் தனது உயிரை எல்லாம் துச்சமாக நினைத்து தொடர்ந்து கார் பந்தய போட்டிகளில் இந்த வயதிலும் எந்தவொரு தயக்கமும் காட்டாமல் தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தி வருவதை பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் அஜித்: விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் பெரிதாக ஓடவில்லை. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையிலும், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடவில்லை. தியேட்டரில் வெளியான போது கிடைத்த பாராட்டுக்களை விட குறைவாக ஓடிடியிலும் ரசிகர்களை கவர முடியாமல் கவிழ்ந்துவிட்டது விடாமுயற்சி. துபாய் கார் பந்தயத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் கார் பந்தயங்களில் தனது அணியுடன் பங்கேற்கும் முயற்சியை அஜித் குமார் எடுத்து வருகிறார். தற்போது பிரான்ஸ் நாட்டில் அஜித் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

Ajith Kumar Ajith Kumar racing hero

காரே அசத்தலா இருக்கே: பிரம்மாண்டமான ஆடி ரேஸ் கார் அருகே அஜித் குமார் நின்று காரை சுற்றி பார்க்கும் வீடியோவும் காரை ஓட்டிப் பார்க்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வேறலெவலில் டிரெண்டாகி வருகின்றன. இந்த கார் தான் அடுத்த போட்டியில் அஜித் குமார் ஓட்டப் போகிறாரா என ரசிகர்கள் வியப்படைந்து பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர் 250 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்தயத்தில் பங்கேற்று வருவது ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

ரசிகர்களுடன் புகைப்படம்: பிரான்ஸ் நாட்டில் ரசிகர்களுடனும் ரசிகர்களின் குழந்தைகளுடனும் அஜித் குமார் புகைப்படம் எடுத்துக் கொண்ட போட்டோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அஜித் குமாருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் பாருங்க என அஜித் ரசிகர்களும் ஹேப்பியாக போஸ்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

குட் பேட் அக்லி சம்பவம்: குட் பேட் அக்லி படத்துக்குப் போட்டியாக தனுஷ் இட்லி கடையை போடலாம் என பார்த்தார். ஆனால், குட் பேட் அக்லி டீசருக்கு கிடைத்த இமாலய வரவேற்பு காரணமாக அந்த முடிவை தனுஷ் விட்டு விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், யாரும் எதிர்பாராத விதமாக அஜித்தை தனுஷ் இயக்கப் போவதாகவும் ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் உலாவி வருகின்றன. நடிப்பைத் தாண்டி முழு நேர இயக்குநராக தனுஷ் மாறப்போகிறாரா என்றும் அண்ணன் செல்வராகவனையே ஓவர்டேக் செய்து வருகிறாரே என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X