போற போக்கை பார்த்தா ‘குட் பேட் அக்லி’ பொங்கல் தான் போல.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட செம மாஸ் அப்டேட்!

சென்னை: அஜித் குமார் ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு டபுள் தமாக்கா ஆண்டு தான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால், முதலில் ரசிகர்கள் "கடவுளே அஜித்தே"ன்னு எந்த படத்தின் முதல் நாள் ஷோவில் கத்தப் போகின்றனர் என்கிற கேள்வி தான் ஹெவியாக கிளம்பி வருகிறது.

வரும் தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தின் டீசர் வரும் என்றும் அனிருத் லீக் பண்ணதை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படம் தான் பொங்கலுக்கு வரும் என்றெல்லாம் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

good bad ugly ajith kumar vidamuyarchi

ஆனால், தற்போது விடாமுயற்சியை ஓவர்டேக் செய்துக் கொண்டு ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். தவெக மாநாடு நடக்கும் நாளிலும் அடுத்தக்கட்ட அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லி அப்டேட்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா நடித்து வரும் குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு வரும் என இதுவரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் உறுதியாக உள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை யார் கைப்பற்றியுள்ளார் என்கிற அப்டேட்டை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

கோட் படத்தை வாங்கியவரே: ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தான் தளபதி விஜய் நடித்த கோட் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி இருந்தது. 100 கோடி ரூபாய் ஷேர் அள்ளி கேக் வெட்டியும் கொண்டாடினர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் தமிழ்நாட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளதாக சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.

விடாமுயற்சியை முந்துதே: லைகா நிறுவனம் இன்னமும் வேட்டையன் வசூல் வேட்டையாடி வருவதாகவே முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் விடாமுயற்சி பக்கம் வண்டியை திருப்ப மாட்டேங்கிறது என ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், விடாமுயற்சியை குட் பேட் அக்லி முந்துகிறதே என மீம்ஸ் எல்லாம் போட ஆரம்பித்து விட்டனர்.

டபுள் ட்ரீட்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் டிசம்பர் மாதம் புஷ்பா 2 படத்தையும் ஜனவரி மாதம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தையும் கொடுத்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது. அதே போல நடிகர் அஜித் குமாரும் பேக் டு பேக் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சியை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X