30 வருஷம் ஆனாலும் அதே மாஸ்.. அஜித்தை சந்தித்த சிரஞ்சீவி.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து பேசினார் அஜித். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொள்கின்றனர். இவர்களின் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படத்தில் கேங்ஸ்டராக அஜித் நடித்திருந்தார். வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ajith kumar chiranjeevi good bad ugly

விடாமுயற்சி: ஆனால், அந்த கதை அஜித்திற்கு பிடிக்கவில்லை என்றும், அதன் பிறகு தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விக்னேஷ் சிவன் அந்த படத்தை இயக்கவில்லை. இதையடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் ஆரம்பித்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட பொழுதும், இன்றளவும் பெரிய அளவில் இப்படத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அஜித்தின் ரசிகர்களை சோகத்தில் உள்ளனர்.

குட் பேட் அக்லி: விடாமுயற்சி படம் வெளியாவதே விடாமுயற்சியாக இருக்கும் நேரத்தில், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகி உள்ளார். அப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியும் வெளியானதால், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிரஞ்சீவியுடன் சந்திப்பு: இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள தல அஜித், ஓய்வு நேரத்தில் தனது பைக்கில் உலா வந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. தற்போது, நடிகர் அஜித்குமார் தெலுங்கு முன்னணி நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் சிரஞ்சீவி நடிக்கும் விஷ்வாம்பரா படத்தின் ஷூட்டிங்கும், ஒரே இடத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் சிரஞ்சீவி பட படப்பிடிப்பு தளத்திற்கு அஜித் சென்று அவரை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.

அஜித்தும் சிரஞ்சீவியும் 30 ஆண்டுகளுக்கு முன் பிரேம புஸ்தகம் என்ற அஜித்தின் முதல் தெலுங்கு படத்தின்போது, இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பல ஆண்டுகள் கழித்து இப்போது இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளனர். இந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X