Ajith Kumar: குழந்தையாகவே மாறிய அஜித்.. பையனோட ஸ்கூல்ல எப்படி ஃபுட்பால் ஆடுறாரு பாருங்க!
சென்னை: விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த ஷெட்யூலுக்காக விரைவில் செல்ல உள்ள நிலையில், சென்னையில், தனது மகனுடன் கால் பந்து விளையாடும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் தங்களது குழந்தைகளுக்கு முதலில் அப்பா என்பதை எந்த ஊரு நடிகரும் மறக்காமல் குழந்தைகளுக்காக அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதிலும் நடிகர் அஜித் தனது மகன் பள்ளியில் ஏற்கனவே டயர் ஓட்டிய காட்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்பாக தீயாக பரவின. மேலும் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வரும் தனது மகனுக்காக கோச்சிங் சென்டருக்கு அஜித் சென்ற காட்சிகளும் புகைப்படங்களாக வெளியாகி இருந்தன. இந்நிலையில், குழந்தைகளுடன் குழந்தையாக மாறி அஜித்தும் கால்பந்து விளையாட்டு விளையாடும் புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
விடாமுயற்சி: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. பல மாதங்களாக அந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் அங்கே சூட்டிங் முழுவதும் நிறைவடைந்து விட்டதாகவும் அடுத்ததாக மற்றொரு இடத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என லைகா அறிவித்தது. இந்நிலையில், சென்னையில் சில நாட்கள் ஓய்வில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
கால்பந்து விளையாடும் அஜித்: குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நடக்கும் விழாக்களுக்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் நடிகர் அஜித். சமீபத்தில் தனது மகன் கால்பந்து விளையாட்டில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவனுடன் சேர்ந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
போட்டி இல்லை: நடிகர் அஜித்குமாருக்கு ஆரம்பத்திலிருந்து சினிமாவில் தளபதி விஜய் பெரும் போட்டியாக நிலவி வந்தார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு இருவரும் நேருக்கு நேர் மோதினர். அஜித்தின் ஆக்ஷன் படமான துணிவு திரைப்படத்தை விட விஜய்யின் குடும்ப டிராமாவான வாரிசு திரைப்படம் அதிக வசூலை ஈட்டியது. ஆனால், இனிமேல் விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டி போட வாய்ப்பே இல்லையா என்றும் ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
விடாமுயற்வி vs GOAT: லியோ போட்டியாக ஏகே 62 படம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் வெளியேற்ற பிரச்சினை காரணமாக அந்த படம் தாமதமாகிவிட்டது. விடாமுயற்சி என தற்போது மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். லியோ படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை அடைந்த நிலையில், அடுத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் அதிரடியாக தயாராகி வருகிறது. விடாமுயற்சி மற்றும் கோட் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி பெரிய சம்பவத்தை செய்யுமா என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஆனால், ஏப்ரல் அல்லது மே மாதமே விடாமுயற்சி வெளியாகி விடும் என்றும் ஜூன் மாதம் தான் கோட் வெளியாகும் என்றும் கூறுகின்றனர். ஆனாலும், இரண்டு படங்களில் இந்த ஆண்டு அதிக வசூலை எந்த படம் ஈட்டும் என்கிற போட்டி இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











