அஜித் சினிமாவில் நடிப்பதை நிறுத்திட்டாரா?..ஏகே பேட்டி பார்த்தால் அப்படித்தான் இருக்கு.. விவரம் என்ன?
சென்னை: நடிப்பை தாண்டி அஜித்குமார் இப்போது ரேஸில்தான் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். அடுத்ததாக அவர் என்ன படத்தில் நடிப்பார் என்று கேள்வி கேட்ட ஏகே ரசிகர்கள் எல்லாம்; இப்போதோ அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்று கேட்கும் நிலைமைக்கு சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தன்னுடைய அடுத்தடுத்த பிளானை தெரிவித்திருக்கிறார்.
நடிப்பில் செம பிஸியாக இருந்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியவர் அஜித். அவருக்கு கரியர் ஆரம்பத்திலிருந்தே கார் ரேஸ் மீதும் ஆர்வம் இருந்தது. இப்போது அதில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறார். ஏகே ரேஸிங் டீம் என்ற ஒன்றை உருவாக்கி தனது அணியினரோடு உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று பரிசுகளை வென்றுவருகிறார். சமீபத்தில் பிரான்ஸில் நடந்த கார் ரேஸில்கூட அவரது அணி டாப் 3 இடங்களுக்குள் வருவதற்கு நூலிழையில் மிஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் கரியர்?: ஏகேவின் சினிமா கரியரை பொறுத்தவரை கடந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்தார். அது ஏதோ நடிக்க வேண்டுமே என்று நடித்த மாதிரிதான் இருந்தது. அவரது ஃபெர்ஃபார்மன்ஸில் எந்த குறையும் இல்லை. ஆனால் படத்தின் மற்ற விஷயங்களை எல்லாம் அவர் கவனித்தாரா? எப்படி அந்தக் கதைகள் மீது நம்பிக்கை வைத்தார் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் புலம்பி தள்ளினார்கள். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கிறார் என சொல்லப்பட்டாலும்; அந்த பேச்சுக்கள் எல்லாம் கடலுக்கடியில் கிடக்கும் கல் போல்; அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் இருக்கிறது.
அஜித்தின் பேட்டி: இதையெல்லாம் கவனித்துவரும் ரசிகர்கள் ஒருவேளை ஏகேவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வமே இல்லையோ எனவும் புலம்புகிறார்கள். இந்நிலையில் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அடுத்தக்கட்ட பிளான்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில், "எனது ரெடான்ட் அணியின் மெக்கானிக்குகள், பொறியாளர்கள் மற்றும் உடன் பயணிக்கும் வீரர்கள் என அனைவரும் ஒரு மிகச்சிறந்த குழுவாக செயல்பட்டுவருகிறோம். இவர்களோடு இருப்பது எனது இரண்டாவது குடும்பத்துடன் இருக்கும் நினைப்பை தருகிறது.
குடும்பம் இந்தியாவில்: நான் கடந்த மூன்று வருடங்களாக துபாயில்தான் இருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர்தான் இந்தியாவில் இருக்கிறார்கள். கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்க வேண்டியது இருப்பதால் இப்போதைய பந்தய காலங்களில் ஐரோப்பில் அதிக நேரம் செலவிட்டுவருகிறேன். அடுத்த ஆண்டுக்கான பந்தய திட்டங்களை இப்போதே தயார் செய்துவருகிறோம். ஏசியன் லெ மான்ஸ், இ.எல்.எம்.எஸ் ஆகிய தொடர்களிலும் பங்கேற்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.
தொடர்ந்து பங்கேற்பேன்: என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயங்களில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஒவ்வொரு வருடமும் இந்த கிரெவென்டிக் தொடரில் தொடர்ந்து பங்கேற்க விரும்புகிறேன்" என்றிருக்கிறார். இதை பார்த்த அவரது ரசிகர்களோ, 'ஏகே இந்தப் பேட்டியில் சொல்லியிருகும் பிளானை பார்த்தால் அவர் தொடர்ச்சியாக இனி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பே இல்லையோ என்று தோன்றுகிறது. அப்படி செய்தால் ரொம்ப கஷ்டம். ஒருவேளை ஆதிக் ரவிச்சந்திரன் படம்தான் கடைசி படமோ?' என சோஷியல் மீடியாவில் புலம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications
