விஜய் கிரிக்கெட் விளையாடி பார்த்திருக்கீங்க.. அஜித்தை அப்படி பார்த்ததுண்டா?.. ஏகே செம ப்ளேயர் ப்பா

சென்னை: அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என்று தெரிகிறது. அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் யார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. அநேகமாக சிவா இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

அஜித் கடந்த வருடத்தில் மட்டும் இரண்டு படங்களில் நடித்தார். கார் ரேஸில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த சினிமா கமிட்மென்ட்டுகளை முடிக்கும் நோக்கத்தில் விரைந்து செயலாற்றினார். அடுத்தடுத்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு ட்ரீட்டுகள் ஏகே ரசிகர்களுக்கு கிடைத்தன. ஆனால் இரண்டு படங்களுமே அவர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குட் பேட் அக்லியை மட்டும் கொஞ்சம் ரசித்தார்கள்.

Ajith Kumar s Cricket Video Goes Viral Fans Celebrate AK s Fun Side
Photo Credit:

கார் ரேஸில் பிஸி: அஜித்தின் கவனம் இப்போது பெரும்பாலும் கார் ரேஸின் மீதுதான் இருக்கிறது. உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று அவர் தனது டீமுடன் பந்தயங்களில் கலந்துகொள்கிறார். அப்படி பங்கேற்கும் போட்டிகளில் எப்படியாவது டாப் 5 இடத்துக்குள்ளும் வந்துவிடுகிறார். இத்தனை வருடன் கார் ரேஸ் தாகத்தை அனுபவித்து அனுபவித்து தீர்த்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதை பார்த்து அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்தான்.

Also Read
ரஜினிகாந்த்துக்கு வயதானாலும் மாஸ் குறையல.. அவரை பார்க்க நடிகை செய்த செயல் என்ன தெரியுமா?
ரஜினிகாந்த்துக்கு வயதானாலும் மாஸ் குறையல.. அவரை பார்க்க நடிகை செய்த செயல் என்ன தெரியுமா?

அஜித்தில் மாற்றம்: முக்கியமாக கார் ரேஸ் அவருக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அதாவது முன்பெல்லாம் பேட்டிகள், விளம்பர படங்கள் என்றாலே 100 அடி தூரமாக நிற்பவர் ஏகே. இப்போதோ ஆங்கில ஊடகங்களுக்கு தொடர்ந்து சில பேட்டிகளை கொடுத்தார். அந்தப் பேட்டியில்தான் கரூர் துயர சம்பவம் குறித்தும் ஓபனாகவும், போல்டாகவும் பேசியிருந்தார். அதேபோல் கேம்ப்பா கோலா விளம்பர படத்திலும் அவர் நடித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அவருக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நிச்சயம் ஆச்சரியம்தான்.

அடுத்த படம்: அவருக்கு பிடித்த ரேஸிங்கில் சாதிப்பதை பார்த்து ரசிகர்கள் ஆனந்தமடைந்தாலும்; சினிமாவில் கவனம் செலுத்தவில்லையே என்ற கவலையிலும் இருக்கிறார்கள். ஏகேவின் லைன் அப்பை பொறுத்தவரை அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இரண்டு பேரும் இணைவது உறுதியானாலும்; இந்தப் படம் பற்றிய அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வரவில்லை. கூடிய விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்தப் படத்தில் ஸ்ரீலீலாதான் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அஜித் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது இப்போது சென்னையில் இருக்கும் அவர் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் அட்டகாசமாக ஜொலித்தார். ஏற்கனவே வாரிசு பட ஷூட்டிங் சமயத்தில் விஜய் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலானது. இப்போது அதைவிட அதிகமாக இந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X