ப்பா.. அந்த கடுக்கன் என்னம்மா மின்னுது.. மின்னல் வேகத்தில் சென்ற அஜித்தின் வீடியோ செம வைரல்!
சென்னை: நடிகர் அஜித் குமார் சென்னை எக்மோர் அருகே அவசர அவசரமாக காரில் ஏறும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை எப்போ வரும் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தை திரையில் எப்போ பார்க்கப் போறோம் என ரசிகர்கள் தினமும் காலண்டர்களை கிழித்தபடி காத்திருக்கின்றனர்.
வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்து பதறிப் போன ரசிகர்கள் வலிமை டீசருக்காக காத்திருக்கின்றனர்.

’தல’ன்னு கூப்பிடாதீங்க
தல என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், திடீரென அஜித் குமார் என்று அழைத்தால் மட்டும் போதும் எனக்கு எந்தவொரு பட்டப் பெயரும் வேண்டாம் என நடிகர் அஜித் குமார் அதிரடி அறிக்கை வெளியிட்டது ஆருயிர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வீழ்ந்தாலும் எழுவேன்
அட்டகாசம் படத்தில் இடம்பெற்ற 'உனக்கென்ன' பாடலிலேயே பீனிக்ஸ் பறவை நான் என பாடிய அஜித் குமார் வலிமை மேக்கிங் வீடியோவில் வீழ்ந்தாலும் எழுவேன் என வெளிப்படுத்தியதை பார்த்து ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் தமிழ் சினிமா ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனார்கள். பைக் ஸ்டன்ட்டின் போது விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையிலும், அந்த காட்சியை முடித்துக் கொடுக்க மீண்டும் எழுந்து வந்த அஜித்துக்கு பலரும் ராயல் சல்யூட் அடித்து வருகின்றனர்.

வலிமைக்கு வெயிட்டிங்
2022ம் ஆண்டு எப்போது பிறக்கும் பொங்கல் பண்டிகை எப்போ வரும் என வலிமை படத்தின் தியேட்டர் ரிலீசுக்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் வேறமாறி வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர். வலிமை படத்தின் பிசினஸ் எல்லா ஏரியாக்களிலும் படு வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
எக்மோரில் அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் எக்மோரில் இருந்து அவசர அவசரமாக தனது காரில் முகக்கவசம் அணிந்த படி செல்வதை ரசிகர்கள் செல்போன் மூலமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

மின்னும் கடுக்கன்
இணையத்தில் தீயாக பரவி வரும் அந்த வீடியோவில் நடிகர் அஜித் குமார் காதில் அணிந்துள்ள அந்த கடுக்கன் தான் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. கடுக்கன் சூப்பர் தல என ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்து தெறிக்க விட்டு வருகின்றனர். 2022ம் ஆண்டு ஓப்பனிங்கே தமிழ் சினிமா வலிமையுடன் வசூல் வேட்டை நடத்தி ஆரம்பிக்கப் போவது உறுதி.


Click it and Unblock the Notifications











