நடிகை சம்யுக்தா கணவரின் முதல் திருமணம்.. கலந்துகொண்ட அஜித்.. அட சூப்பரா இருக்கே.. மகள் செம க்யூட்

சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் இரண்டாவது திருமணம் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அவர்களது திருமணத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் அனிருதா ஸ்ரீகாந்த்தின் முதல் திருமணத்தில் நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினி மகள் அனௌஷ்கா கலந்துகொண்ட புகைப்படங்கள் திடீரென ட்ரெண்டாகியிருக்கின்றன.

மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்த சம்யுக்தா சண்முகநாதனுக்கு இதுவரை பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு அண்ணியாகவெல்லாம் நடித்து பார்த்தார். ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படியான ரோல்கள் இதுவரை கிடைக்கவில்லை. கடைசியாக அவர் நடித்த மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தில்கூட முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். ஆனால் படம் வந்ததும் தெரியவில்லை சென்றதும் தெரியவில்லை.

திருமண வாழ்க்கை: தொடர்ந்து கதைகள் கேட்டு படங்களில் நடிக்க கமிட்டாகிவருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு அவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் பெரியவர்களால் பார்த்து செய்துவைக்கப்பட்டது. சம்யுக்தா - கார்த்திக் தம்பதிக்கு ராயன் என்ற மகனும் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

Ajith Kumar s Family Photos from Samyuktha Husband Anirudha s First Wedding Are Trending
Photo Credit:

அதுதான் காரணமா?: அந்த விவகாரத்துக்கு முழுக்க முழுக்க கார்த்திக்தான் காரணம் என்று சம்யுக்தா ஒரு பேட்டியில் பேசினார். அதாவது துபாயில் ஒரு பெண்ணுடன் சில வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும்; இது தெரிய வந்த பிறகுதான் சம்யுக்தா விவாகரத்துக்கு சென்றிருக்கிறார். முதல் திருமண முறிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த அவர்; முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் காதலில் விழுந்தார்.

இரண்டாவது திருமணம்: இந்தக் காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே அதில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். அனிருதாவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே ஆர்த்தி என்ற மாடலை திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார்.

முதல் திருமண புகைப்படங்கள்: அவர்களது திருமணம் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணமாகி இரண்டு வருடங்களிலேயே அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் அந்தத் திருமணத்தில் அஜித்குமார், அவரது மனைவி ஷாலினி, மகள் அனௌஷ்கா ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.

ரிஜெக்ட் செய்த ஆர்த்தி: முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்த்திக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை மறுத்துவிட்டார். மணிரத்னத்தின் பட வாய்ப்பை நிராகரித்தாலும் சில வருடங்களுக்கு பிறகு பிஜோய் நம்பியார் இயக்கத்தில் சோலோ படத்தில் முக்கியமான கேரக்டரை அவர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X