கேம்பா விளம்பரத்தில் மிரட்டிவிட்ட அஜித்.. தியேட்டரில் போடுவாங்களானு ஏங்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2024ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மீண்டும் அவரை பெரிய திரையில் பார்க்க ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் அஜித் நடித்துள்ள கேம்பா விளம்பரம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஜித் குமார் ரேசிங் என்ற கார் ரேஸ் அணியை தொடங்கிய அஜித் குமார் அதில் தன்னுடன் இணைந்து கார் டிரைவிங் செய்ய சர்வதேச நாடுகளில் இருந்து டிரைவர்களை தேர்வு செய்தார். மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான கார் ரேஸில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் விருதுகளையும் வென்றது அவரது அணி.

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியிலேயே அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அவர் மீண்டும் ஆசிய அளவிலான கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயோ, அல்லது மார்ச் மாதத்திலேயோ தொடங்கும் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அவரது கார் ரேஸ் பந்தய பயணமானது இந்த ஆண்டு முழுவதுமே நடைபெறவுள்ளதால், அஜித் எப்போதுதான் மீண்டும் படத்தில் நடிப்பார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் நடிகர் அஜித் குமார் தனது ரேஸிங் அணிக்கான நிதி திரட்டலில் அஜித், கேம்பா விளம்பரத்தில் நடித்தார். இது அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்டைக் கொடுத்தாலும், சில ரசிகர்கள் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸின் போது அஜித் கட்-அவுட்டுக்கு கேம்பா அபிஷேகம் எல்லாம் செய்தனர்.
இப்படி இருக்கையில் அஜித் நடித்த கேம்பா குளிர்பான விளம்பரம் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் விளம்பரத்தில் எல்லாம் அஜித் நடிப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று தெரிவித்து வந்தாலும், சில ரசிகர்கள் தல அஜித் இந்த விளம்பரத்தில் ரேஸ் கார் ஓட்டுகிறார். எடிட்டிங் எல்லாம் மிரட்டலாக உள்ளது. எனவே இந்த விளம்பரத்தை தியேட்டரில் போட்டால் அதுவும் ரிப்பீட் மோடில் போட்டால் பார்த்துக் கொண்டே இருப்போம் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











