200 கோடியாக சம்பளத்தை உயர்த்துகிறாரா அஜித் குமார்?.. வரிசைக்கட்டி அரை டஜன் தயாரிப்பாளர்கள் வெயிட்டிங்?

சென்னை: எச். வினோத் இயக்கத்தில் 3 படங்கள், மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படம் என அஜித் குமார் நடித்தாலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் இறங்கி நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த ரசிக்ர்கள் கூட்டமும் இப்படியொரு அஜித் படத்தை பார்க்கத்தான் ரொம்ப வருஷமா வெயிட்டிங் என தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிதாக வசூல் செய்ய முடியாமல் தவித்த நிலையில், குட் பேட் அக்லி 5 நாட்கள் விடுமுறையை பயன்படுத்தி 100 கோடி வசூலை ஈட்டி அசால்ட்டு காட்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக டிராகன் படத்தை வீழ்த்தி குட் பேட் அக்லி முதலிடத்தை பிடித்துள்ளது.

Ajith Kumar salary might increased to 200 crores soon many producers waiting in line for his next

அஜித் குமார் இந்த ஆண்டு இரண்டு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் படங்களை கொடுத்து முன்னிலையில் உள்ள நிலையில், அவருடைய சம்பளம் 165 கோடியில் இருந்து 200 கோடிக்கும் மேல் அதிகரிக்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

300 கோடி தாண்டும்: முதல் வார முடிவிலேயே அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 200 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் நாளில் 30 கோடி வசூலை ஈட்டிய குட் பேட் அக்லி 5 நாட்களில் ஒட்டுமொத்தமாக 100 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மாதம் இறுதி வரை இதே வேகத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் ஓடினால் கண்டிப்பாக 300 கோடி வசூலை கடக்கும் என்கின்றனர்.

200 கோடி சம்பளம்: நடிகர் விஜய் ஜன நாயகன் படத்துக்காக 275 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்துக்கு 165 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், அடுத்த படத்துக்கு அஜித் குமாரின் சம்பளம் குறைந்த பட்சம் 200 கோடியாக உயரும் என்கின்றனர்.

ஆதிக்கா? தனுஷா?: நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு முழுக்க முழுக்க கார் ரேஸிங்கில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இப்போதைக்கு அவர் புதிய படத்தில் கமிட் ஆகமாட்டார் என்றே தெரிகிறது. ஆனால், அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது தனுஷ் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. மேலும், வெங்கி அட்லூரியும் அஜித்துக்கு கதை சொல்ல முயற்சித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

அரை டஜன் தயாரிப்பாளர்கள்: மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் ஒரு படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வேல்ஸ் நிறுவனம், டான் பிக்சர்ஸ், சன் பிக்சர்ஸ், கேவிஎன் என சுமார் அரை டஜன் தயாரிப்பு நிறுவனங்கள் அஜித் குமாரின் கால் ஷீட்டை பெறுவதற்காக போட்டி போடத் தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், பல தயாரிப்பாளர்களும் அஜித் குமார் படத்தை தயாரிக்க முயற்சிப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X