Ajith Kumar Racing: விடாமுயற்சி, குட் பேட் அக்லியை கொண்டாடினால் தான் உண்டு.. அஜித் அதிரடி முடிவு!

சென்னை: இந்த 2025ம் ஆண்டை அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் நல்லா கொண்டாடிக் கொள்ள வேண்டியதுதான் போல. ஒரு பக்கம் தளபதி 69 படத்துடன் விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் இறங்கப் போகிறார். இன்னொரு பக்கம் அடுத்த 9 மாதங்களுக்கு அஜித் குமார் புதிய படத்தில் ஒப்பந்தம் கூட பண்ணப் போவதில்லை என்பதை அதிரடியாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

18 வயது முதலே மோட்டார் ரேஸிங்கில் தான் தனக்கு ஆர்வம் என்றும் கடைசியாக கார் பந்தயத்தில் பங்கேற்றாலும் நடிகனாக இருந்த நிலையில், ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை எனக்கூறிய அஜித் குமார் அடுத்த பல மாதங்களுக்கு புதிய படங்களில் ஒப்பந்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளார்.

ajith kumar good bad ugly

இந்த ஆண்டு வெளியாகவுள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை ரசிகர்கள் முழுமையாக கொண்டாடினால் தான் உண்டு என ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து ஃபீல் செய்து வருகின்றனர்.

24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித்: நடிகர் அஜித் குமார் உருவாக்கியுள்ள அஜித் குமார் ரேஸிங் அணி துபாயில் நடைபெறும் 24 மணி நேர கார் பந்தயத்தில் பங்கேற்கிறது. மொத்தம் 3 டிரைவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றி மாற்றி அதிகபட்சம் 240 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்ட வேண்டும் என்கிற விதியுடன் இந்த பந்தயம் நடைபெறும் என்கின்றனர். சில மணி நேர பயிற்சியின் போதே அஜித் குமாரின் கார் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆன நிலையில், இன்னும் சில மாதங்களுக்கு அஜித் கார் ரேஸிங்கில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தப் போகிறார் என்றதுமே வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது.

பீனிக்ஸ் பறவை: ஏகப்பட்ட விபத்துக்களையும் அறுவை சிகிச்சைகளையும் சந்தித்துள்ள நடிகர் அஜித் குமார் 53 வயதில் இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் இப்படியொரு கார் பந்தயத்தில் பங்கேற்பதே மிகப்பெரிய விஷயம் தான். தன்னைத் தானே செதுக்கியவன் என சும்மா எல்லாம் சொல்லவில்லை. நிஜமாகவே அவர் ஒரு பீனிக்ஸ் பறவை தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமாவுக்கு ரெஸ்ட்: நடிகர் அஜித் குமார் வரும் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ள பல்வேறு கார் பந்தயங்களில் தனது டீமுடன் கலந்துக் கொள்ளப் போவதாகவும் கார் பந்தயம் முடியும் வரை எந்தவொரு படத்திலும் கமிட்டாக போவதில்லை என்பதை உறுதியாக கூறியுள்ளார். சினிமாவில் கமிட் ஆகிவிட்டால் கார் பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவதில்லை என்றும் தான் நடிக்கவில்லை என்றால் யாரும் கவலைப்படமாட்டார்கள் என்றும் அதன் பின்னர் படங்களில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லியை கொண்டாடுங்க: இந்த ஆண்டு அஜித் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை தியேட்டரில் கொண்டாடுங்க. அதன் பின்னர் ஸ்போர்ட்ஸ் சேனலில் அஜித்தின் ரேஸ்களை பார்த்து ஃபயர் விடலாம். அக்டோபர் வரை அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்ய மாட்டார் என்றால் அதன் பின்னர் அவர் கமிட்டாகி அடுத்த படம் வெளியாக 2026 இறுதி அல்லது 2027 தொடக்கம் கூட ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் அஜித் குமாருக்கு நிச்சயம் வெற்றிகள் குவிய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X