அஜித் நான் சொன்ன மாதிரி பண்ணியாச்சா.. ஏகேவிடம் ஷாலினி எவ்வளவு க்யூட் பாருங்க.. செம ஜோடி ப்பா!

சென்னை: அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித்துக்கும், ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களுக்கு கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகள், ஒரு மகள் என குடும்பத்தோடு நிம்மதியாக இருக்கிறார்கள். முக்கியமாக ஒருவரை ஒருவர் அனுசரித்தும், மதித்தும் நடக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு பேர் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரன அஜித்; தனது 25ஆவது படமாக அமர்க்களம் படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்தார். கேமரா முன்பு காதலர்களாக நடித்த அவர்கள்; அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளாகவே நிஜ காதலர்களாக மாறிவிட்டார்கள். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2000ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்கள். ஒரு மகளையும், ஒரு மகனையும் பெற்றெடுத்தார்கள் அவர்கள்.

Ajith Kumar amp amp Shalini Ajith Viral Video Couple s Cute Moments Melt Fans Online
Photo Credit:

சூப்பர் ஜோடி: ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளில் ஒன்று அஜித் - ஷாலினி ஜோடி. இரண்டு பேரும் உச்சபட்ச காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். அஜித்துக்கு பக்கபலமாக இருக்கும் ஷாலினி; ஏகே செய்யும் விஷயங்களுக்கு முழு சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார். அதேபோல்தான் அஜித்தும். ஷாலினியின் பேட்மிண்டன் ஆர்வத்தை புரிந்துகொண்டு அதில் புகழ் பெறுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் ரேஸில் அஜித்: இப்போது ஏகே தனது கவனத்தை கார் ரேஸிலும் செலுத்திவருகிறார். உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று அவர் கலந்துகொள்ளும் போட்டிகளை ஷாலினியும் நேரில் சென்று ரசித்து, உற்சாகப்படுத்துகிறார். அதேபோல் தன்னுடைய ரேஸ் தொடங்குவதற்கு முன்பு சர்க்யூட்டில் ஷாலினி இருந்தால் அவருக்கு மறக்காமல் ஒரு காதல் முத்தத்தை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வீடியோக்கள் எல்லாம் பயங்கரமாக ட்ரெண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை.. சந்தோஷத்தில் ஜாய் கிரிஸில்டா.. என்ன சொன்னாங்க தெரியுமா?
குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை.. சந்தோஷத்தில் ஜாய் கிரிஸில்டா.. என்ன சொன்னாங்க தெரியுமா?

சூப்பர் வீடியோ: இந்நிலையில் அஜித் - ஷாலினி தொடர்பான இன்னொரு வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அஜித் தனது தோழர்களுக்கு, தோழிகளுக்கும் இறைச்சி சமைத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்த ஷாலினி, 'நான் சொன்ன மாதிரி பண்ணியாச்சா?' என ஜாலியாக கேட்க; அதை கேட்ட அஜித்தும், மற்றவர்களும் உடனே சிரித்துவிட்டார்கள்.

மேலும் தனது தோழிகளுடன் செல்ஃபி எடுக்கும்போது, 'அஜித் இங்கே பார்' என சொல்ல; ஏகேவோ, 'எங்கே' என கேட்டு கேமராவை தேடி; பிறகு போஸ் கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், 'இந்த ஜோடி தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது' என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

அஜித்தின் அடுத்த படம்: ஏகேவின் சினிமா கரியரை பொறுத்தவரை கடந்த வருடம் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டுமே சுமார் ரகமான படங்கள்தான். அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்தப் படங்கள் பற்றிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X