Ajith Birthday: ஃபிட்னஸில் அதிகம் ஆர்வம் செலுத்தாத அஜித்.. என்ன காரணம்? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!

சென்னை: மலையாள நடிகர் மம்மூட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பல சீனியர் நடிகர்களும் இந்த வயதிலும் ஃபிட்னஸில் செம பக்காவாக உள்ளனர்.

ஆனால், 52வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நடிகர் அஜித் ஏன் ஃபிட்டாக இல்லை என்கிற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியிலேயே எழுந்தாலும், அஜித்தின் முகத்தை பார்த்தால் போதும், அந்த ஃபேஸ் வேல்யூவுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என கொண்டாடி வருகின்றனர்.

பரமசிவன், திருப்பதி படங்களில் எல்லாம் செம ஃபிட்டாக ஒல்லியாக வந்த அஜித் சில ஆண்டுகளாகவே தனது ஃபிட்னஸை சுத்தமாக கண்டுக் கொள்ளாதது ஏன் என்கிற கேள்விக்கு பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார்.

Ajith Kumar shows less interest on his fitness for this shocking reason?

பஜன்லால் சேட்டு என விமர்சனம்: ஆணழகன், காதல் மன்னன் என அஜித்தை கொண்டாடி வந்த தமிழ் சினிமாவில் திடீரென அவரது உடல் தோற்றத்தை கிண்டல் செய்யும் விதமாக பஜன்லால் சேட்டு என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் விமர்சிக்கும் அளவுக்கு நேரிட்டது அஜித் ரசிகர்களை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியது.

மற்ற நடிகர்கள் போல நடிகர் அஜித் ஏன் ஃபிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பைக் டூருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என சில ரசிகர்களே கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Ajith Kumar shows less interest on his fitness for this shocking reason?

சிம்பு போல அஜித்தால் மாற முடியாதா?: உடல் எடை அதிகரிப்பு காரணமாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், நடிகர் சிம்பு சில மாதங்கள் அதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஸ்லிம்மாகி வந்தார்.

பத்து தல படத்துக்காக மீண்டும் பருமனான சிம்பு அடுத்த படத்துக்காக 3 மாதங்களில் சூப்பர் ஸ்லிம்மாகி உள்ளார். இதே போல நடிகர் அஜித்தால் தனது உடல் எடையை குறைக்க முடியாதா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Ajith Kumar shows less interest on his fitness for this shocking reason?

இதுதான் காரணமா?: நடிகர் அஜித் ஃபிட்னஸ் ஃப்ரீக்காக மாறாமல் இருப்பதற்கு விபத்து காரணமாக முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்த நிலையில், அதற்காக ஸ்டெராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கிறாராம்.

அந்த காரணத்தினால் தான் அதிகமாக அவரால் வொர்க்கவுட் செய்ய முடியவில்லை என்றும் உடல் எடையை குறைக்க அதிக முயற்சிகளை செய்யாமல் இருந்தாலும், சரியான ஃபிட் உடன் தான் அஜித் இருக்கிறார் என பிஸ்மி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X