ரேஸில் பழுதாகி நின்ற கார்.. கூலாக பேசிய அஜித்.. மனுஷன் டென்ஷனே ஆகல.. ஏகே செம கெத்துதான்

சென்னை: அஜித் நடிப்பில் இந்த வருடம் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே கார் ரேஸிலும் கலந்துகொண்டிருந்தார் அவர். உலகம் முழுவதும் சென்று ரேஸ் செய்யும் அவர் இப்போது மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார். அங்கு நடக்கும் ரேஸில் அவர் டீமின் கார் பழுதடைந்து நின்ற சூழலில்; எந்த பதற்றமும் இல்லாமல் ஏகே பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகர்களில் ஒருவரான அஜித்; கடந்த சில வருடங்களாகவே வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த வருடம் மட்டும் குட் பேட் அக்லி, விடாமுயற்சி என இரண்டு படங்களில் நடித்தார். அவற்றில் விடாமுயற்சி படுதோல்வியை சந்தித்தது. குட் பேட் அக்லி அவரது ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கப்போகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பும் வரவிருக்கிறது.

ஏன் இரண்டு படங்கள்?: இந்த வருடத்தில் அஜித் இரண்டு படங்களில் நடித்தது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைத்துறையில் இருப்பவர்களுக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. ஆனால் கார் ரேஸில் இப்போது அவரது முழு கவனமும் இருக்கிறது. எனவே ரேஸில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அதற்கும் முன்னதாகவே தான் கமிட்டான படங்களை முடித்து கொடுக்க வேண்டும் என்பதிலும், ரேஸில் கலந்துகொள்ளும்போது எந்த இடைஞ்சலும் இருக்கக்கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார்.

Ajith Kumar Stays Calm as Team Car Breaks Down During Malaysia Race Video Goes Viral
Photo Credit:

ரேஸில் வென்ற அஜித்: ஏகே 24 மணி நேரமும் நடக்கும் ரேஸில் தனது டீமுடன் களமிறங்கியிருக்கிறார். உலகம் முழுவதும் சென்று தனது டீமுடன் ரேஸ் செய்யும் அவர் ஸ்பெயினில் நடந்த ரேஸில் மூன்றாவது இடத்தை பிடித்தார். அடுத்ததாக அபுதாபியில் நடக்கும் ரேஸிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். ரேஸில் கலந்துகொண்டு அங்கும் தனது தடத்தை அழுத்தமாக பதித்துவரும் அஜித்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் வாழ்த்து தெரிவித்துவருகிறது.

மலேசியாவில் அஜித்: அவர் இப்போது தன்னுடைய டீமோடு மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார். அவர் அங்கு வந்திருப்பதை கேள்விப்பட்ட மலேசிய வாழ் தமிழர்கள் ரேஸ் நடக்கும் சர்க்கியூட்டுக்கு படையெடுத்து சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அதேபோல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மலேசியா சென்றிருந்த சிம்புவும் அஜித்குமாரை நேரில் சந்தித்தார். இந்நிலையில் அஜித்தின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன வீடியோ?: அதாவது மலேசியாவில் இப்போது நடந்துகொண்டிருக்கும் ரேஸில் அவர் டீமுடைய கார் பழுதாகி பாதியிலேயே நின்றுவிட்டது. ஊழியர்கள் அதனை சரி செய்யும் வேலைகளில் இறங்கினார்கள். எந்தப் பதற்றமும் இல்லாமல் கூலாக பேசிய அஜித், "காருடைய ரேடியட்டரில் பிரச்னை வந்திருக்கிறது. அதை விரைவில் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். இது வருத்தமாக இருந்தாலும் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பந்தயம் என்றால் அதுதானே" என்றார்.

More from Filmibeat

Read more about: ajith அஜித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X