அடிமேல் அடி.. அஜித் உடம்பில் இவ்வளவு பிரச்சனைகளா?.. இப்பவும் ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கிறாரே!
சென்னை: நடிகர் அஜித் குமார் தன்னைத் தானே செதுக்கியவர் என ரசிகர்கள் கொண்டாட காரணமே எந்த நேரத்திலும் அவர் விடாமுயற்சியாக பல கஷ்டங்கள் உடம்பில் இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு தொடர்ந்து போராட வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பதால் தான்.
ஜாக்கி சான், சச்சின் டெண்டுல்கர், அஜித் குமார் என சாதனை நாயகர்கள் எல்லாமே பல அறுவை சிகிச்சைகளை பார்த்து வந்தவர்களாகத்தான் உள்ளனர். சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் நடிகர்கள் பெரும்பாலும் ஸ்டன்ட் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து உடம்பை ரணமாக்கிக் கொண்டாலும் பரவாயில்லை ரசிகர்கள் சந்தோஷமாக படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என தங்கள் உடம்பை வருத்திக் கொண்டு தொடர்ந்து புதிய புதிய ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகின்றனர்.

ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை: மெக்கானிக்காக ஆரம்பத்தில் அஜித் குமார் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் எக்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டார். அதன் பின்னர், நடிகர் அஜித் மாடலிங்கில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த நிலையில், 1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அஜித்துக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் பிரேம புஷ்தகம், தமிழில் அமராவதி படங்கள் மூலம் அறிமுகமான நடிகர் அஜித் ரேஸ் ஒன்றில் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமாக அவருக்கு அடிபட்டு 3 அறுவை சிகிச்சைகளை ஆரம்பத்திலேயே மேற்கொள்ள நேரிட்டது.
கார் ரேஸ் பிரியர்: சுமார் ஒன்றரை ஆண்டுகள் படுக்கையிலேயே ஓய்வெடுத்தார். ஆனால், அதன் பின்னரும் பந்தயங்களில் கலந்து கொள்ள நடிகர் அஜித் பயந்ததே கிடையாது. 2002ம் ஆண்டு ஃபார்முலா மாருதி இந்தியா ரேஸில் கலந்து கொண்ட அஜித் 4வது இடத்தை பிடித்தார். 2003ம் ஆண்டு ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா கார் பந்தாயத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் 2010ம் ஆண்டு FIA Two Champions, MRF உள்ளிட்ட கார் பந்தயங்களில் அவர் கலந்து கொண்டார்.

15 முறை அறுவை சிகிச்சை: நடிகர் அஜித் குமார் இதுவரை 14 முறை முதுகு தண்டில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஒரு முறை காலில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறாராம். இந்நிலையில், தற்போது மூளையில் உள்ள கட்டியை நீக்க அஜித் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேர்ல்ட் பைக் டூர்: உடம்பில் என்னதான் காயங்களும் பல முறை அறுவை சிகிச்சைகளை செய்தாலும் தொடர்ந்து உலகம் முழுவதும் பைக் டூர் செல்வேன் என அஜித் ஒவ்வொரு நாட்டிலும் பல கிலோ மிட்டர்கள் பல மணி நேரங்கள் ஓய்வின்றி எப்படித்தான் மனுஷன் பைக் ஓட்டிச் சென்றாரோ என ரசிகர்கள் மட்டுமின்றி பல மருத்துவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு முயன்றால் முடியாதது எதுவுமில்லை என சாதித்துக் காட்டி வரும் அஜித் மேலும், பல சாதனைகளை சினிமாவிலும் அவரது ரியல் லைஃப் பேஷனிலும் செய்வார் என்பது நிச்சயம்.


Click it and Unblock the Notifications











