twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசை முதல் என்னை அறிந்தால் வரை... அஜீத்தை தூக்கி நிறுத்திய டாப் 10 படங்கள்

    By Manjula
    |

    சென்னை: அஜீத்குமார் சுருக்கமாக அஜீத் அவரின் ரசிகர்களுக்கு அவர் என்றும் தல, தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் முன்னணிக்கு வந்த ஒரு நடிகர்.

    கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதியுடன் அஜீத் நடிக்க வந்து 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன, இதனைக் கொண்டாடும் பொருட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அஜீத்தின் சிறப்புகளை பதிவு செய்தனர்.

    கடந்த 23 ஆண்டுகளில் சுமார் 55 படங்களில் அஜீத் நடித்திருக்கிறார், அவற்றில் அஜீத்தை தூக்கி விட்ட மற்றும் அவரை உருவாக்கிய சிறந்த 10 படங்களை இங்கே பார்ப்போம்.

    ஆசை

    ஆசை

    1995 ம் ஆண்டு அஜீத், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆசை, இயக்குநர் வசந்த் இயக்கிய இந்தப் படத்தை மற்றொரு இயக்குனரான மணிரத்னம் தயாரித்து இருந்தார். காதலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் அஜீத் சாக்லேட் பையனாக நடித்திருந்தார், அஜீத்தை ஆரம்பகாலத்தில் தூக்கி நிறுத்திய படமாக ஆசை திரைப்படம் மாறியது. தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அந்தக் கால இளைஞர்களின் சுப்ரபாதமாக மாறியது, மேலும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 20 வருடங்களுக்கு முன்பே சுமார் 5 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    காதல் கோட்டை

    காதல் கோட்டை

    வான்மதி திரைப்படத்திற்குப் பின் அகத்தியன் இயக்கத்தில் அஜீத் நடித்த காதல் கோட்டை, அன்றைய இளைஞர்களுக்கு பிடித்த கோட்டையாக மாறியது. தேவயானியுடன் இணைந்து அஜீத் நடித்த இந்தப் படம் அஜீத்தின் முதல் ப்ளாக்பஸ்டராக மாறியது, மேலும் 2 தேசிய விருதுகளை பெற்ற காதல் கோட்டை பாக்ஸ் ஆபீஸையும் விட்டு வைக்கவில்லை. சுமார் 10 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பியது படம்.

    காதல் மன்னன்

    காதல் மன்னன்

    1998 ம் ஆண்டில் இயக்குநர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த காதல் மன்னன் திரைப்படம், அஜீத்தின் வலுவான திரை வாழ்க்கைக்கு ஒரு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. திருமணமான ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் இளைஞன் வேடத்தில் அஜீத் நடித்து இருந்தார், துறுதுறுவென்று காதல் மன்னன் திரைப்படத்தில் அஜீத் நடித்ததில் இந்தப் படத்திற்குப் பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர்.

    வாலி

    வாலி

    1999 ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த வாலி திரைப்படத்தில் அஜீத் முதன்முறையாக 2 வேடங்களில் நடித்து இருந்தார். அஜீத், சிம்ரன், ஜோதிகா மற்றும் விவேக் இணைந்து நடித்த இந்தப் படத்தில் சகோதரரின் மனைவி மீது ஆசைப்படும் நபராக காது கேட்காத வாய் பேசமுடியாத வேடத்தில் அஜீத் நடித்து இருந்தார்.மேலும் நிறைய விருதுகளை அஜீத்திற்கு பெற்றுத் தந்த படமாகவும் வாலி மாறியது.

    அமர்க்களம்

    அமர்க்களம்

    1999ம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் அமைதியான மற்றும் பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு ரவுடியாக அஜீத் நடித்து இருப்பார். காதல் மன்னன் திரைப்படத்திற்குப் பின்பு சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த இந்தப் படம், அஜீத்தின் வாழ்க்கையை நிஜமாகவே மாற்றியது. ஆம் இந்தப் படத்தில் தான் அஜீத் தனது மனைவியான ஷாலினியை காதலித்து கரம்பிடித்தார்.

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    2000 த்தில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம், அஜீத்தின் நடிப்பை இன்னும் வெளிக் கொணர்ந்தது. சக நடிகர்களான அப்பாஸ், மம்முட்டி மற்றும் தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார் அஜீத்.

    வரலாறு

    வரலாறு

    2006 ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத் நடித்து வெளிவந்த வரலாறு திரைப்படம், வரலாறு காணாத வெற்றியை பெற்றது. முதல்முறையாக அஜீத் 3 வேடங்களில் இந்தப் படத்தில் நடித்து இருந்தார், மேலும் நல்ல ஒரு டான்சராகவும் இந்தப் படத்தில் கலக்கி இருந்தார் அஜீத். படம் 55 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.

    பில்லா

    பில்லா

    2007 ம் ஆண்டில் அஜீத் நடிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கி வெளிவந்த திரைப்படம் பில்லா, 27 வருடங்கள் கழித்து ரஜினி நடித்த பில்லா படத்தை அஜீத்தை வைத்து ரீமேக்கினார் விஷ்ணுவர்த்தன். படம் நல்ல வெற்றி பெற்றது மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆடைகள், ஸ்டைல் என்று எல்லாமே ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    மங்காத்தா

    மங்காத்தா

    2011 ம் ஆண்டில் அஜீத்தின் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது, தமிழ் சினிமாவின் இலக்கணங்களை முதல்முறையாக உடைத்து எறிந்த பெருமை அஜீத்தையே சேரும். 4 இளம் நடிகர்களுடன் நரைத்த முடி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து அசத்தியிருப்பார்.

    என்னை அறிந்தால்

    என்னை அறிந்தால்

    இந்த வருடத்தில் (2015) வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் முதல்முறையாக, இயக்குநர் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்றி இருந்தார். அழகான போலீஸ், காதலன், பொறுப்பான அப்பா என்று பன்முகங்களை இந்தப் படத்தில் அஜீத் வெளிப்படுத்தி இருப்பார். 500 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சுமார் 1070 மில்லியன்களை வசூலித்து சாதனை புரிந்தது.

    தற்போது அஜீத் நடித்து வரும் தல56 படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர், இதில் எந்த விதியை உடைக்கப் போகிறார் என்று தெரியவில்லை பார்க்கலாம்.

    English summary
    From Aasai to Yennai Arindhaal, Ajith Kumar Top 10 Best Movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X